📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 19, 2026 11:31 AM

தொழில் தொடங்குவோருக்கு ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி புதிய சட்டம்... இனி 21 நாளில்

தொழில் தொடங்குவோருக்கு ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி புதிய சட்டம்... இனி 21 நாளில்

தொழில் தொடங்குவோருக்கு ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி புதிய சட்டம்... இனி 21 நாளில் எல்லாம் ஓகே!

Tamil Nadu Business Approval Law: தமிழகத்தில் புதிதாகத் தொழில் தொடங்குவதை மேலும் எளிதாக்கவும், தொழில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கவும் தமிழக அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

தமிழகத்தில் புதிதாகத் தொழில் தொடங்குவதை மேலும் எளிதாக்கவும், தொழில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கவும் தமிழக அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அதன்படி, தொழில் தொடங்குவதற்கான அரசு அனுமதிகளையும் ஒப்புதல்களையும் 21 நாட்களுக்குள் கட்டாயமாக வழங்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை இயற்ற அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் உட்படப் பல்வேறு அரசுத் துறைகளிடம் இருந்து முறைப்படி ஒப்புதல்களைப் பெற வேண்டியுள்ளது. இந்தத் துறைகளின் அனுமதிகளை ஒரே இடத்தில் எளிதாகப் பெறும் வகையில், 'ஒற்றைச் சாளர முறையில்' சான்றிதழ்கள் மற்றும் அனுமதிகளை வழங்கித் தரும் பணியில் தமிழக வழிகாட்டி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணியில் தொழில் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காகத் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களிடம், 21 நாட்களில் அனைத்து ஒப்புதல்களும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நடைமுறையில் சில அரசுத் துறைகள் ஒப்புதல்களையும் அனுமதிகளையும் வழங்குவதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் சிரமத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளாகின்றனர்.

இந்த நிலையை முற்றிலும் மாற்றி, தொழில் திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும் வகையில் சட்டப்பூர்வ காலக்கெடுவை நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, ஒரு தொழில் நிறுவனத்தின் விண்ணப்பத்திற்கு 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை எனில், அந்த ஒப்புதல் தானாகவே வழங்கப்பட்டதாக (Deemed Approval) உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான சட்ட முன்வடிவு தற்போது தீவிரமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், தமிழகத்தில் தொழில் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி