📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 19, 2026 11:33 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

அதாவது வாரத்தின் தொடக்க நாளிலும் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,270க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14,160க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று முன்தினம் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.255க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இதையடுத்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,290க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.255, ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,205க்கு விற்பனை; சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250க்கு விற்பனையாகிறது.