Latest News
October 08, 2026 01:03 AM
துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்
உடுமலை: உடுமலை நகராட்சியில், துாய்மைப்பணியாளர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை நகராட்சியில், துாய்மைப்பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என, 125 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு, போனஸ் வழங்க வேண்டும். மேலும், துாய்மைப்பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், அதற்கான வாகனங்கள் வழங்கவும்,
காலையில் உணவாக கொடுப்பதற்கு பதில், மாநகராட்சியை போல், நகராட்சி பணியாளர்களுக்கும் உணவுப்படி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலக வளாகத்தில், இரண்டாம் நாளாக நேற்றும், துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Latest News