துக்க வீட்டுக்கு சிரித்த முகத்துடன் வந்த ஷாலினி.. குவியும் கமெண்ட்ஸ்!
சென்னை: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, தனது 94வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் அஜித்தின் மனைவியும் பிரபல முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித், சௌகார் ஜானகியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேனாம்பேட்டை இல்லத்திற்கு வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சௌகார் ஜானகிக்கு சில தினங்களுக்கு முன் மூச்சுதிணறல் ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கமலின் இரங்கல் பதிவில் பார்த்தால் பசி தீரும் படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். ஒரு அன்னை பிம்பம் விடைபெற்றுவிட்டது என கண்ணீருடன் பதிவிட்டு இருந்தார்.
நெட்டிசன்கள் ட்ரோல்: சௌகார் ஜானகியின் உடல் தேனாம்பேட்டையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகை ஷாலினி, சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்து, சௌகார் ஜானகியின் பேத்திகளைக் கட்டியணைத்து முத்தமிட்டு ஆறுதல் கூறினார். ஷாலினி சிரித்த முகத்துடன் வந்த காட்சியை பார்த்த சில நெட்டிசன்கள், துக்க வீட்டிற்கு வரும்போது கூடவா இப்படிச் சிரித்துக்கொண்டே வருவார்கள்? எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விபரம் கூடத் தெரியாதா? எனக் காட்டமாகக் கருத்துக்களைப் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.
ஆதரவாகக் குரல்: அதே நேரம், ஒருவரின் முகபாவனையை வைத்து மட்டுமே அவரது முழு மனநிலையை மதிப்பிட முடியாது. சோகத்தில் இருக்கும் குடும்பத்தினரைக் கண்டு ஒரு புன்னகையோடு ஆறுதல் அளிப்பதே இயல்பான மனிதப் பண்பு. துக்க வீட்டிலும் கேமராக்களை முகத்திற்கு நேரே பிடித்துக்கொண்டு டிரெண்டிங்கிற்காக வீடியோ எடுக்கும் கலாச்சாரத்தை விமர்சிக்கும் ரசிகர்கள், நடிகர்கள் என்ன செய்தாலும் அதை விமர்சிப்பது வாடிக்கையாகிவிட்டது எனக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.