துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் ரந்தீர் சிங் காலமானார்
துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் ரந்தீர் சிங் காலமானார்
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை ராஜா ரந்தீர் சிங் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published : May 27, 2026 at 4:26 PM IST
ஹைதரபாத்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் முதல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த ராஜா ரந்தீர் சிங், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்தியாவின் மிகச்சிறந்த துப்பாக்கிச் சுதல் வீரர்களில் ஒருவராக அறியப்பட்டவர் ராஜா ரந்தீர் சிங். பஞ்சாம் மாநிலத்தின் பட்டியாலாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ரந்தீர் சிங், கடந்த 1978 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலின் தங்கம் வென்று அசத்தினார்.
இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார். அதனைத் தொடர்ந்து 1982ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினார்.
இதுதவிரா 1968ஆம் ஆண்டு நடைபெற்ற மெக்ஸிகோ ஒலிம்பிக், 1984ஆம் ஆண்டு நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலும் அவர் இந்தியா சார்பில் பங்கேற்றார். இருப்பினும் அவரால் அதில் எந்த பதக்கத்தையும் வெல்ல முடியவில்லை. இருப்பினும் அவரது சாதனைகளை பாராட்டும் விதமாக 1979ஆம் ஆண்டு இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தது.
The Olympic Council of Asia is deeply saddened by the passing of Raja Randhir Singh, Honorary Life President of the OCA, Honorary Member of the International Olympic Committee, and former President of the Olympic Council of Asia. pic.twitter.com/KFnweIga7T
அதனைத் தொடர்ந்து தனது ஓய்வுக்கு பிறகும் ரந்தீர் சிங், விளையாட்டு நிர்வாகியாகப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார். அதன்படி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவர் என பல்வேறு பொருப்புகளில் அவர் பணியாற்றியுள்ளார்.
அதிலும் குறிப்பாக, ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் ராஜா ரந்தீர் சிங் பெற்றார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் அவர் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவர் பதவியில் இருந்து விலகி, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
My heart fills with sadness on the passing away of Shri Raja Randhir Singh ji, a dear friend and an extraordinary human who took India to new heights in sports in Asia and around the world. We have lost an exceptional leader & his irreplaceable wisdom. Rest in Peace Raja Saheb 🙏🏽 pic.twitter.com/W9QakDhslk
இதையும் படிக்கவும்
இந்நிலையில், ராஜா ரந்தீர் சிங் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு இந்திய விளையாட்டுத் துறையின் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. ரந்தீர் சிங்கின் மறைவுக்கு விளையாட்டுத் துறை சார்ந்த அமைப்புகள், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் முன்னணி விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.