📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 26, 2026 06:03 PM

டி20 கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி

டி20 கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி

புதுச்சேரி: மொஹாலியில் நடந்த சீனியர் டி20 கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரி அணி 158 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சீனியர் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. மொஹாலி நகரில் நேற்றைய போட்டியில், மத்திய பிரதேசம் அணியும், புதுச்சேரி அணியும் மோதியது. முதலில் ஆடிய, மத்திய பிரதேசம் அணி 20 ஓவர்களில், 7 விக்கெட் இழந்து 157 ரன்கள் எடுத்து. புதுச்சேரி அணியின் ப்ரணய் சிங் 4 விக்கெட் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய, புதுச்சேரி அணிக்கு, ராகவன், வேதாந்த் பரத்வாஜ் சிறப்பான துவக்கத்தை அளித்தனர், பின்னர், விக்கெட்டுகள் இழந்தாலும், பரமேஸ்வரன் பொறுப்புடன் விளையாடி 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 19.4 ஓவர்களில், 8 விக்கெட் இழந்து புதுச்சேரி அணி 158 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 46 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்த புதுச்சேரி அணியின் பரமேஸ்வரன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.