கவிமாலைக் கவிஞர்களின் சிறப்புக் கலந்துரையாடல்
நவம்பர் மாதக் கவிமாலையில் கவிமாலைக் கவிஞர்களின் ‘மரபுக்கவிதை மறைகிறதா? மறுமலர்ச்சி காண்கிறதா?’ எனும் சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெறவிருக்கிறது. கவிஞர்கள் கி கோவிந்தராசு, வச்சிரவேலன், காசாங்காடு அமிர்தலிங்கம், இராம நாச்சியப்பயன், ஆகியோர் அதில் பங்கேற்கின்றனர். கவிமாலையின் 318வது மாதச் சந்திப்பு நிகழ்ச்சி, சனிக்கிழமை (நவம்பர் 28) மாலை 6 மணிக்கு, தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் உள்ள பாசிபிலிட்டி அறையில் நடைபெறவிருக்கிறது. கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை சிங்கப்பூரில் உள்ள கவிஞர்களுடனும் கவிதை ஆர்வலர்களுடனும் அதனை நடத்துகிறது. நிகழ்ச்சியில் கவிதை நூல் அறிமுக அங்கமும் இடம்பெறவிருக்கிறது. கவிஞர் செவியின்ப சங்கீதா, ‘பாரி’ எனும் நூலை அறிமுகம்செய்வார்.
கவிஞர் சாய் பாலாஜி நிகழ்ச்சியினை வழிநடத்தச் சிறுவர்களின் கவிதைப் பகிர்வு அங்கம், கவிதையும் காரணமும், கவிதை விமர்சனம், போட்டிக் கவிதைகள் வாசித்தல், பரிசளிப்பு ஆகிய அங்கங்களும் வழக்கம்போல் இடம்பெறும்.