📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 27, 2026 10:32 PM

AUS vs ENG: 108 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா.. 5 விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீரர் ஜெமி ஓவர்டன்

AUS vs ENG: 108 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா.. 5 விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீரர் ஜெமி ஓவர்டன்

AUS vs ENG: 108 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா.. 5 விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீரர் ஜெமி ஓவர்டன்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்கத்தில் லியாம் டவ்சன் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி அளித்தார். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன், துல்லியமான ஷார்ட் பால்கள் மற்றும் வேரியேஷன்கள் மூலம் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையைச் சரித்தார்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டு பெரிய ஷாட்களை ஆட முயன்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 16.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் ஜேமி ஓவர்டன் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

109 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அநியூரின் டொனால்ட் 13 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் அமைத்தார். இருப்பினும், போட்டிக்கு மழை தொடர்ந்து தடங்கலாக இருந்தது. மழை காரணமாக ஆட்டம் பலமுறை நிறுத்தப்பட்டு, DLS முறையில் இலக்கு 93 ரன்களாக மாற்றப்பட்டது.

ஜோர்டான் காக்ஸ் 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இங்கிலாந்து அணி 8.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் ரைலி மெரிடித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேமி ஓவர்டன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி குறித்துப் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், ஜேமி ஓவர்டனின் உழைப்பையும் அணியின் சிறப்பான செயல்பாட்டையும் பாராட்டினார். ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தபோதிலும் பேட்ஸ்மேன்களின் ஷாட் தேர்வு சரியாக அமையாததே தோல்விக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி நவம்பர் 29 அன்று புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.