📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 07, 2026 04:31 AM

TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி

TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி

TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?

Tamil Nadu Budget 2026: தமிழ்நாட்டின் 2026- 27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தவெக ஆட்சி அமைந்த பிறகு அமைந்த முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எந்தெந்த துறைக்கு எவ்வளவு?

இந்த தவெக நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? என்பதை கீழே காணலாம்.

1. பள்ளிக்கல்வி - ரூபாய் 44 ஆயிரத்து 527 கோடி

2. ஊரக வளர்ச்சி - ரூபாய் 39 ஆயிரத்து 609 கோடி

3. நகராட்சி நிர்வாகம் - ரூபாய் 29 ஆயிரத்து 863 கோடி

4. மக்கள் நல்வாழ்வு - ரூபாய் 23 ஆயிரத்து 357 கோடி

5. நெடுஞ்சாலை - ரூபாய் 21 ஆயிரத்து 524 கோடி

6. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை - 17 ஆயிரத்து 290 கோடி

7. சிறப்பு திட்ட செயலாக்கம் - ரூபாய் 17 ஆயிரத்து 150 கோடி

8. எரிசக்தி - ரூபாய் 15 ஆயிரத்து 828 கோடி

9. வேளாண்மை - ரூபாய் 14 ஆயிரத்து 984 கோடி

10. உணவு - ரூபாய் 14 ஆயிரத்து 830 கோடி

11. போக்குவரத்து - ரூபாய் 13 ஆயிரத்து 561 கோடி

12. வருவாய் - ரூபாய் 11 ஆயிரத்து 532 கோடி

13. சமூகநலம் - ரூபாய் 9 ஆயிரத்து 818 கோடி

14. வீட்டுவசதி - ரூபாய் 8 ஆயிரத்து 852 கோடி

15. உயர்கல்வி - ரூபாய் 8 ஆயிரத்து 393 கோடி

16. கூட்டுறவு - ரூபாய் 8 ஆயிரத்து 28 கோடி

17. கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம் - ரூபாய் 4 ஆயிரத்து 880 கோடி

18. தொழில் - ரூபாய் 4 ஆயிரத்து 414 கோடி

19. சமூக நீதி - ரூபாய் 3 ஆயிரத்து 937 கோடி

20. நீதித்துறை - ரூபாய் 2 ஆயிரத்து 486 கோடி

21. சிறு, குறு தொழில்கள் - ரூபாய் 2 ஆயிரத்து 142 கோடி

22. தொழிலாளர் நலன் - ரூபாய் 2 ஆயிரத்து 22 கோடி

23. சுற்றுச்சூழல் மற்றும் வனம் - ரூபாய் ஆயிரத்து 762 கோடி

24. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலம் - ரூபாய் 1,700 கோடி

25. கைத்தறி - ரூபாய் 1,678 கோடி

26. மாற்றுத்திறனாளிகள் நலம் - ரூபாய் 1,485 கோடி

27. விளையாட்டு - ரூபாய் 1,051 கோடி

28. வணிக வரி - ரூபாய் 651 கோடி

29. பத்திரப்பதிவு - ரூபாய் 475 கோடி

30. இயற்கை வளங்கள் - ரூபாய் 438 காேடி

31. .தகவல் தொழில்நுட்பம் - ரூபாய் 398 கோடி

32. சுற்றுலா - ரூபாய் 775 கோடி

33. இந்து சமய அறநிலையத்துறை - ரூபாய் 708 கோடி

பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம்:

கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளிக்கல்விக்கு தவெக அரசு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கத்தில் ஊரக வளர்ச்சி, நகராட்சி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு ரூபாய் 4 ஆயிரத்து 414 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடன் சுமையை கருத்தில் கொண்டு தவெக அரசு இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி