📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 05, 2026 01:01 PM

TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட்; தவெகவின் வாக்குறுதிகளும், மக்கள் எதிர்பார்ப்பும் என்ன? | Live Updates

TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட்; தவெகவின் வாக்குறுதிகளும், மக்கள் எதிர்பார்ப்பும் என்ன? | Live Updates

TN Budget 2026: துறை ரீதியான நிதி ஒதுக்கீடுகளும் மாநில கடன், வருவாய் விவரங்களும்! | Budget Highlights

தமிழ்நாட்டின் 2026-27 பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தவெக தேர்தல் வாக்குறுதிகளில் எவை இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக பட்ஜெட் தொடர்பான செய்திகளின் தொகுப்பு...!

``மாநிலத்தின் நிதிநிலை நிலையில்லாமல் உள்ளது. கடன் சுமையால் நிரம்பியும், குறைந்தபட்ச வருமானத்துடனும் உள்ளது.

கசியும் ஓட்டைகளுடன் கூடிய கஜானா எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணி தொடங்கிவிட்டது. ஆனாலும், நிதி நிர்வாகத்தை Fiscal Consolidation பாதைக்கு கொண்டு வர குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

கடன்களைப் பெறுதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான மதிப்பீடுகள், இந்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்த கடன் வரம்பின் அடிப்படையில் இறுதிசெய்யப்பட்டுள்ளன. பொதுக்கடன்களை பொறுத்தமட்டில் இவ்வரசு 2026-27, மொத்தம் 1,73,445 கோடி ரூபாய் கடன் பெறவும், 51,971 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் 2026-27ல் 55,775 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேம்பட்ட வரி நிர்வாகம் மற்றும் வசூல் திறன் உள்ளிட்ட வருவாய் பெருக்க நடவடிக்கைகளின் விளைவாக, இது 2027-28ல் 53,933 கோடி ரூபாயாகவும், 2028-29ல் 51,058 கோடி ரூபாயாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது: இதன்மூலம் மாநிலத்தில் மூலதனச் செலவினத்திற்குக் கூடுதல் இடம் உருவாகும். " என மரிய வில்சன் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

மக்களுக்கு விரைவான மற்றும் தரமான நீதி வழங்கும் உட்கட்டமைப்பு,

முன் நடவடிக்கைகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ.1,375 கோடி மதிப்பீட்டில் உலகத் தர நீதிமன்ற வளாகம்.!

மெட்ரோ விரிவாக்கம்!

நதிகள் இணைப்பு... நதிகள் மீட்பு!

``மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நியாயமான பங்களிப்பையும், நலனையும், உரிமையும் அரசு தொடர்ந்து பாதுகாக்க்கும்.

ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்கள், தீர்ப்பாயங்களின் தீர்ப்புகள், நீதிமன்ற உத்தரவுகளின் படி, காவிரி நீர் உரிய நேரத்தில் திறந்துவிடப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.

மேகதாது திட்டம் மாதிரியான மாநிலங்களின் உரிமையைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை எதிர்ப்பது உள்ளிட்ட சட்ட ரீதியான, நிர்வாக ரீதியான தமிழ்நாட்டின் நீர் உரிமைகளை அரசு பாதுகாக்கும்.

நீண்ட கால நீர் பாதுகாப்பை ஏற்படுத்தவும், விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துதல், ஆனைமலை ஆறு, நல்லாறு செயல்திட்டங்களைச் செயல்படுத்துதல், கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை வேகமாக செயல்படுத்த வேண்டிய வலியுறுத்தல்களை அரசு மேற்கொள்ளும்." - மரிய வில்சன்

MY HOME - மாநகர இளைஞர் மற்றும் குடும்ப வீட்டு வசதித் திட்டம்!

சென்னை பெருநகரத்தில் அறிமுகம்.

PPP முறையில் ரூ.15,000 கோடி முதலீடு. அடுத்த 7ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள். குறைந்த வருமானக் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான, தரமான குடியிருப்புகள்.

ரூ.3,500 கோடி Viability Gap Funding.

மின்சாரத்துறை.!

``தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்.

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

IN-SPACe இணைந்து மேம்பட்ட விண்கலப் பொதுத் தொழில்நுட்ப வசதி.

விண்வெளி ஏவுதளத்தின் புவியியல், முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டு மண்டலம் அமையும்." - மரிய வில்சன்

இந்தியாவின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (AI) நகரம்

Al பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் & குறைகடத்தி சோதனை ஆய்வகம்.

AI, குவாண்டம் தொழில்நுட்பம் & ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த மையம்

இதன் சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

`தூய சக்தியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தொழில்நுட்ப சக்தியாகவும் இருக்க வேண்டும்.' - மரிய வில்சன்

கறவை மாடுகள் வழங்கும் திட்டம்!

`ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு. ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்.'

``நடையாய் நடக்கும் மனிதர்களை மறந்துவிடும் ஆட்சியைப் போல அல்லாமல், வாயில்லா ஜீவன்களின் மீது அன்பும், கவனமும் செலுத்தும் ஆட்சி தான் இந்த மனசாட்சி உள்ள மக்களாட்சி அரசு." - மரிய வில்சன்

``மீனவ மக்களுக்காக குரல் கொடுப்பதிலும், மீனவர் மீது பாசம் காட்டுவதிலும் புரட்சி தலைவருக்குப் பிறகு உண்மையான மீனவ நண்பனாக இருக்கும் ஒரே தலைவர் நம்முடைய முதலமைச்சர்." - மரிய வில்சன்

தாய் கேர் திட்டம்!

வெற்றி தொழில் முனைவோர் திட்டம் – ₹75 கோடி

``ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 'வெற்றி தொழில் முனைவோர் திட்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய தொழில்களைத் தொடங்க மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக ₹75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் – ₹165 கோடி!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொழில் தொடங்க மூலதன மானியம், கடன் வசதி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும். இதற்காக ₹165 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

மண்ணின் மக்கள் திட்டம் – ₹20 கோடி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்கில் 'மண்ணின் மக்கள் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. நிலம் வாங்குபவர்களுக்கு முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ₹20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

அனைவருக்கும் சம வாய்ப்பு – ₹462.41 கோடி

இடஒதுக்கீட்டின் பலன்கள் முழுமையாக சென்றடையும் வகையில் சமூகநீதி சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மேலும் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹462.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

சமூகநீதித் துறைக்கு – ₹3,937 கோடி

சமூகநீதி மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த சமூகநீதித் துறைக்கு ₹3,937 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி சமூக முன்னேற்றத்திற்கும் நலத்திட்ட விரிவாக்கத்திற்கும் பயன்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம் – ₹250 கோடி

பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 'ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படும். கல்வி மற்றும் சுகாதார வசதிகளும் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் – ₹300 கோடி

ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான வசதிகள் உருவாக்கப்படும். இதற்காக ₹300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

விளையாட்டு பயிற்சிகள் – ₹5 கோடி

8 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து தரமான பயிற்சி வழங்க புதிய பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். திறமையான வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டத்திற்கு ₹5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் – ₹42 கோடி

தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு ₹42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – ₹50 கோடி

சர்வதேச தரத்தில் வீரர்களை உருவாக்க மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். உலகத் தரத்திலான பயிற்சி மற்றும் வசதிகளை வழங்க இந்தத் திட்டத்திற்கு ₹50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

சிறப்புத் திறன் பயிற்சித் திட்டம் – ₹150 கோடி

அரசு மற்றும் தனியார் துறைகளின் தேவைக்கேற்ப இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். வேலைவாய்ப்பு திறனை உயர்த்தும் இந்தத் திட்டத்திற்காக ₹150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

அனைத்து மாநில வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி – ₹3.38 கோடி

SSC, RRB, IBPS உள்ளிட்ட தேசிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் வழங்கப்படும். இதற்காக ₹3.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

5,000 அரசு பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படும் 2,600 மாணவர்களுக்கு TN SPARK திட்டத்தின் கீழ் மேம்பட்ட தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும். AI, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட எதிர்காலத் தொழில்நுட்பங்களில் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்ற 'AI Economy Mission' தொடங்கப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் தொழில்துறையினர் இணைந்து AI சார்ந்த புதுமைகள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பார்கள் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

AI திறன் மேம்பாடு

2031-ஆம் ஆண்டுக்குள் பொறியியல், கலை மற்றும் தொழிற்கல்வி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சி வழங்கப்படும். எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை உருவாக்க இது உதவும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் – ₹10 கோடி

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழிக் கற்றல் உள்ளிட்ட புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும். தொழில்துறையின் தேவைக்கேற்ப திறன் மேம்படுத்த இந்த முயற்சிக்காக ₹10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு – ₹2,022 கோடி

தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ₹2,022 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

சிறப்புத் திட்ட செயலாக்கம் – ₹17,150 கோடி

அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை விரைவாகவும் முழுமையாகவும் செயல்படுத்த ₹17,150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் மற்றும் மாநில வளர்ச்சியை முன்னெடுக்கும் முக்கிய திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

``நண்பா, நண்பிகள் மீது பேரன்பு கொண்ட நம்முடைய முதலமைச்சர், முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்று பெயர் வைத்து பெருந்தலைவருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

'விஜய் மாமா... விஜய் மாமா' என்றழைக்கும் குழந்தைகளை நாள்தோறும் சிந்திப்பவர் நம்முடைய முதலமைச்சர்." - மரிய வில்சன்

அண்ணனின் சீர் திட்டம்!

``திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகும். இந்தத் தருணத்தைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் பெண்கள் அனைவரையும் தனது குடும்பத்தில் ஒருவராக கருதுகிறார் முதலமைச்சர்." என்றார்,

``சமூக நீதி என்று சொல்லி ஏமாற்றுபவர் அல்ல நம்முடைய தலைவர். சமூக நீதியை உணர்வுபூர்வமாக ஏற்றவர். அதனால் தான், அவரது தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காப்பதில் உறுதியுடன் உள்ளது.

தமிழ்நாட்டின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது." என்றார் மரிய வில்சன்

தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ.42 கோடி!

மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்!

5 லட்சம் இளைஞர்களுக்கு ஏ.ஐ திறன் பயிறசி!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடிபடையில் மருத்துவப் படிப்பு சேர்க்கை!

மரிய வில்சன், ``தன்னை உயிராக நேசிக்கும் ஜென் Z தலைமுறையினரை தலைசிறந்த தலைமுறையினராக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் முதலமைச்சர்.

தமிழ்நாடு நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் தேசிய அளவில் நடந்த பல்வேறு குளறுபடிகள் எதிர்கால தலைமுறையினரின் எதிர்கால உயர்க்கல்வியைப் பெரிதும் பாதிக்கின்றன. இதனால், நீட் தேர்வை முறையாக ரத்து செய்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடிபடையில் மருத்துவப் படிப்பு சேர்க்கை நடக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.!" என்றார்,

ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் உடன் கூடிய சைக்கிள்!

மரிய வில்சன், ``அரசு மற்றும் அரசு நிதிநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2026-27 நிதியாண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் சுமார் 5.32 லட்சம் ஜென் Z மாணவர்களுக்கு ரூ.277 கோடி ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் உடன் கூடிய சைக்கிள் வழங்கப்பட உள்ளது." என்றார்

புதிய திட்டங்கள் செயல்படுத்தக்கூடிய நிதி ஆதாரம் என்பது குறைவாகவே உள்ளது!

நிதியமைச்சர் மரிய வில்சன், ``மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாய் விகிதம், வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை என பல்வேறு நிதிநிலை குறியீடுகளில் தமிழ்நாடு இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையில் உள்ளது.

மொத்த வருவாய் துறையில் வட்டி செலுத்துவதற்கான தொகையும், பொறுப்பேற்றுக்கொண்ட செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, புதிய திட்டங்கள் செயல்படுத்தக்கூடிய நிதி ஆதாரம் என்பது குறைவாகவே உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவோம்.

அதே நேரத்தில், மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க, டெண்டர் எடுக்க கான்ட்ராக்டர்களிடன் கேட்கப்படும் தேவையற்ற சான்றிதழ்களில் போட்டியில்லாதவாறு மாற்றப்பட்டுள்ளது. டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது.

பல அரசு துறைகளில் பதிவு செய்யப்பட்ட கான்ட்ராக்டர்கள் மட்டுமே டெண்டர் எடுக்க முடியும் என்பதை மாற்றி, எந்தவொரு துறையில் பதிவு செய்திருந்தாலும் தகுதி இருந்தால் பிற துறை டெண்டர்களிலும் பங்கேற்க முடியும்.

இளைஞர்கள், சிறு தொழில்முனைவோர்களும் டெண்டர் எடுக்க ஏதுவாக, முதன்முதலாக குறைந்த மதிப்பில் உள்ள டெண்டர்களின் நடைமுறை எளிதாக்கப்பட்டிருக்கின்றன.

`வெற்றி தமிழகம்'

மரிய வில்சன் மேற்கோள் காட்டிய திருக்குறள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்: எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை.

மேலும் மரிய வில்சன், ``தவெக அரசின் கோட்பாடுகள் - அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நீதி, சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, ஊழலற்ற நேர்மையான வெளிப்படைத்தன்மையுடனான அரசு.

இதை சொன்னது மட்டுமல்லாமல் செய்தும் காட்டியிருக்கிறது தவெக அரசு." என்றார்,

மாபெரும் சரித்திர வெற்றிப் பெற்று ஜனநாயகனாக அமர்ந்திருக்கிறார் முதலமைச்சர்! - மரிய வில்சன் கொடுத்த இன்ட்ரோ

"தனக்கு எல்லாம் கொடுத்த மக்களுக்காக நன்றிக்கடன் செலுத்துவதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய். பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்த்து மாபெரும் சரித்திர வெற்றிப் பெற்று ஜனநாயகனாக அமர்ந்திருக்கிறார் முதலமைச்சர்" என்கிற இன்ட்ரோவுடன் பேச்சை தொடங்கியிருக்கிறார் மரிய வில்சன்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறிய குறள்

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை

பொருள்: செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப்படுத்திக் கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக

தொடங்கியது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்! பட்ஜெட்டை வாசிக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன்.

தமிழக வெற்றிக் கழகத் அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில், நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

சட்டமன்றம் வந்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்!

சட்டசபையில் உதயநிதி.!

தமிழக வெற்றிக் கழகத் அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றம் வந்தார். அவரை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர்.

இன்று பட்ஜெட் தாக்கல்!

தமிழக வெற்றிக் கழகத் அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில், நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று காலை 10 மணியளவில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

என்னென்ன எதிர்பார்ப்புகள்?

தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் இது.

தேர்தல் வாக்குறுதிகளில் தவெக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது. அதில் பெண்களுக்கு...

மதிப்புமிகு மகளிர் திட்டம் - 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய்,

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கல்,

வெற்றிப் பயணம் திட்டம் - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம்,

அண்ணன் சீர் திட்டம் - பெண்களின் திருமணத்திற்காக எட்டு கிராம் (ஒரு பவுன்) தங்கமும், தரமான பட்டுச் சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீர்.

இளைஞர்களுக்கு...

வேலைவாய்ப்பு தாமதச் சூழல் நிதி உதவி - வேலை தேடும் பட்டதாரிகளுக்கு ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ. 2,500 இளைஞர் நல நிதி,

இளைஞர்கள் பங்களிப்பில் நமது நல்லாட்சி - ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் 'முதல்வர் மக்கள் சேவை நண்பர்' பதவியின் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்குத் தலா ரூ. 18,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு,

வெற்றி தொழில் முனைவோர் திட்டம் - இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்ற ரூ. 25 லட்சம் வரை பிணையமில்லாத் தொழில் கடன்.

அரசுப் பணியாளர்கள்...

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்,

5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம்.

இப்படியான வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வாக்குறுதிகளில் என்னென்ன நாளைய பட்ஜெட்டில் இடம்பெற உள்ளது என்பதில் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

யார்? எப்போது?

நாளை தமிழ்நாட்டின் 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார்.

இந்தப் பட்ஜெட் தாக்கல் நாளை காலை 10 மணிக்குத் தொடங்க உள்ளது.

நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6), தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.

நாளை பட்ஜெட் தாக்கல்!

நாளை (ஆகஸ்ட் 5) தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இது தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும்.

இதனால், எப்போதையும் விட, நாளை நடக்க உள்ள பட்ஜெட் தாக்கலுக்கான எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது.