📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 26, 2026 12:04 AM

Toxic: "நான் கர்ப்பமாக இருந்த செய்தியை யஷிடம் சொன்னேன், அப்போது அவர்.!"

Toxic: "நான் கர்ப்பமாக இருந்த செய்தியை யஷிடம் சொன்னேன், அப்போது அவர்.!"

Toxic: "நான் கர்ப்பமாக இருந்த செய்தியை யஷிடம் சொன்னேன், அப்போது அவர்.!"- கியாரா அத்வானி நெகிழ்ச்சி

"அதனால்தான் 'டாக்சிக்கிற்கு முன் கியாரா', 'டாக்சிக்கிற்குப் பின் கியாரா' என்று கூறுகிறேன்"- கியாரா அத்வானி

‘டாக்ஸிக்’ படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நேற்று (ஆகஸ்ட்.24) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கியாரா அத்வானி, " இந்தப் படத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திறமையான பல பெண் ஆளுமைகள் இணைந்து ஒரே தொலைநோக்குப் பார்வையுடன் பணியாற்றியிருக்கிறோம்.

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, மிகச் சிறந்த ஒரு மனிதர். அவருடன் பழகியது என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது.

ருக்மணி வசந்துக்கு மக்கள் கொடுக்கும் அன்பைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது, படத்தில் அவரது கதாபாத்திரம் அட்டகாசமாக வந்திருக்கிறது.

இந்திய சினிமா என்றென்றும் நினைவில் வைத்திருக்கக் கூடிய ஒரு பெயர் 'கீது மோகன்தாஸ்'. என்னை ஒரு அச்சமற்ற கலைஞராக மாற்றியதற்கு அவருக்கு நன்றி. அதனால்தான் 'டாக்சிக்கிற்கு முன் கியாரா', 'டாக்சிக்கிற்குப் பின் கியாரா' என்று கூறுகிறேன்.

யஷ் நம்முடைய ராக்கி பாய், விரைவில் உங்களின் 'ராயா'வாக வரப் போகிறார்.

யஷ் உடன் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் நான் கர்ப்பமாக இருந்த செய்தியை குடும்பத்தினருக்கு அடுத்தபடியாக முதலில் யஷிடம் தான் கூறினேன்.

அப்போது அவர், 'படப்பிடிப்பு எப்படி நடக்கும்?' என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல், கண்களில் மகிழ்ச்சி கண்ணீருடன் என்னைக் கட்டித்தழுவி வாழ்த்தினார்.

'செட்டிற்கு வாருங்கள், உங்களுக்கு என்ன வசதி வேண்டுமோ செய்து கொள்ளுங்கள், விருப்பமானதைச் சாப்பிடுங்கள். நாம் மிகச் சிறந்த படத்தை எடுப்போம்' என்று சொன்னார். அவர் ஒரு அற்புதமான மனிதர்.

நான் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன். 'ஷேர்ஷா' படத்தில் தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் பணியாற்றியுள்ளேன். விரைவில் நல்ல வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நேரடித் தமிழ்ப் படத்தில் நடிப்பேன்" என்று பேசியிருக்கிறார்.