📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 07, 2026 08:04 AM

ட்ரை சீரீஸ் பைனலில் துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா.. ஜிம்பாப்வேவை வீழ்த்தி கோப்பை வென்றது

ட்ரை சீரீஸ் பைனலில் துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா.. ஜிம்பாப்வேவை வீழ்த்தி கோப்பை வென்றது

ட்ரை சீரீஸ் பைனலில் துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா.. ஜிம்பாப்வேவை வீழ்த்தி கோப்பை வென்றது

வின்டோக்: தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையே நேற்று நடைபெற்ற ட்ரை சீரிஸ் டி20 தொடரின் இறுதிப் போட்டியில், ஜிம்பாப்வே அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆல்-ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா, தங்களது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் என்ற ஸ்கோரை குவித்தது. துவக்க வீரர் ஜோர்டான் ஹெர்மன் வெறும் 24 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் அதிரடியாக அரைசதம் கடந்தார். மற்றொரு துவக்க வீரர் கானர் எஸ்டர்ஹுய்சனுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தார். மிடில் ஆர்டரில் டெவால்ட் பிரெவிஸ் 32 ரன்களும், ரூபின் ஹெர்மன் 27 ரன்களும் எடுத்து ரன் வேகத்தை உயர்த்தினர்.

206 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. துவக்க வீரர் பென் கர்ரன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர்களுக்குள்ளேயே ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கேப்டன் சிக்கந்தர் ராசாவும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

எனினும், இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய பிராட் எவன்ஸ் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தை அடித்து போராடினார். ஆனால், அவர் அவுட் ஆன பிறகு ஜிம்பாப்வே அணி 18 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சில் துவான் ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், ஈதன் போஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நீண்ட காலத்திற்கு பின் நடத்தப்பட்ட இந்த ட்ரை சீரிஸ் தொடர், மூன்று அணிகளுக்கும் ஒரு சிறந்த பயிற்சியாக அமைந்தது. தென்னாப்பிரிக்கா அணி இந்த தொடரில் நமீபியாவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து பின் மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டம் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, அடுத்ததாக நமீபியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.