உகாண்டாவில் தமிழ் மொழிக் கல்வி வகுப்புகள்
உகாண்டாவில் தமிழ் மொழிக் கல்வி வகுப்புகள்தமிழ்நாடு அரசின் 'தமிழ் மணம்' திட்டத்தின் கீழ், தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறையோடு இணைந்து உகாண்டா தமிழ்ச் சங்கம் நடத்தும் 'தமிழ்க் கற்றல்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் துவக்கவிழா உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள Delhi Public International School வளாகத்தில் நடைபெற்றது. உகாண்டா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் காதிரி தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ் மணம் திட்டதின் ஆசிரியர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி மற்றும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டிரஸ்டிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தமிழாசிரியர் விஜயகுமாரை உகாண்டாவிற்கும் அனுப்பி, அவரது ஊதியம் மற்றும் உகாண்டாவில் தங்கிப் பணியாற்றுவதற்கான செலவுகளையும் ஏற்றுள்ளது இந்தத் தமிழ் வகுப்புகள் கம்பாலாவில் உள்ள Delhi Public International School வளாகத்தில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து ஓராண்டு காலம் நடைபெற உள்ளது. சுமார் 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் கற்க ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளனர்.