📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 25, 2026 03:03 PM

வாள் சண்டையில் பதக்கத்தை உறுதிசெய்த சிங்கப்பூர்ப் பெண்கள் அணி

வாள் சண்டையில் பதக்கத்தை உறுதிசெய்த சிங்கப்பூர்ப் பெண்கள் அணி

நகோயா: சிங்கப்பூரின் பெண்களுக்கான வாள் சண்டை அணி ஆசிய விளையாட்டுகளில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உஸ்பெகிஸ்தானுடன் பொருதிய அணி 42க்கு 41 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

கிரியா டிகானா அப்துல் ரஹ்மான், எல்லி கோ, எஸ்தர் டான், ஃபில்சா ஹிடாயா ஆகிய நால்வர் கொண்ட அணி பதக்கம் வெல்வது உறுதி. அரையிறுதிச் சுற்றில் ஒருவேளை அவர்கள் தோற்றாலும் வெண்கலப் பதக்கத்தை அணி நிச்சயம் கைப்பற்றும்.

வாள் சண்டையில் சிங்கப்பூர் அணி, ஆசியான் விளையாட்டுகளில் பதக்கம் பெறுவது இதுவே முதல்முறை.

சிங்கப்பூரின் வாள் சண்டை அணி, ஏற்கெனவே ஐச் - நகோயா விளையாட்டுகளில் மூன்று பதக்கங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இனிவரும் நாள்களில் கூடுதலான போட்டிகள் நடைபெறும்.

இம்மாதம் 22ஆம் தேதி கிரியா டிக்கானா, பெண்களுக்கான வாள் சண்டைப் போட்டியில் சிங்கப்பூருக்கான முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

ஒரு நாள் கழித்து, மெக்சின் வோங் தனியார் வாள் சண்டைப் போட்டியில் முதல் பதக்கத்தை வென்றார். பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் யுகா உயினோவிடம் தோற்று அவர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.