வானில் சிக்கிய அமைச்சர் சென்ற விமானம்...? தரையிறங்க முடியாமல் தவிப்பு..!
வானில் சிக்கிய அமைச்சர் சென்ற விமானம்...? தரையிறங்க முடியாமல் தவிப்பு..!
மதுரை விமான நிலையத்தில் பலத்த காற்று வீசி வருவதால், அமைச்சர் நிர்மல் குமார் பயணித்த விமானம் உள்ளிட்ட 2 பயணிகள் விமானங்கள் திட்டமிட்ட நேரத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிடுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, மாலை 3.45 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்களில் ஒன்றில் அமைச்சர் நிர்மல் குமார் பயணம் செய்திருந்தார். ஆனால், திடீரென காற்றின் வேகம் அதிகரித்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்களுக்கு உடனடியாக தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால், அமைச்சர் பயணித்த விமானம் மற்றும் மற்றொரு பயணிகள் விமானம் என மொத்தம் 2 விமானங்கள், வானில் தொடர்ந்து வட்டமிட்டபடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வானிலை சீரான பிறகே விமானங்கள் தரையிறங்கும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.