📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 20, 2026 08:03 AM

வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க மாட்டார்.. இங்கிலாந்து வீரர் திமிர் பேச்சு

வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க மாட்டார்.. இங்கிலாந்து வீரர் திமிர் பேச்சு

வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க மாட்டார்.. இங்கிலாந்து வீரர் திமிர் பேச்சு

மும்பை: இந்தியாவின் இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கான தொழில்நுட்ப யுத்தியைகொண்டிருக்கவில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். தற்போதைய நவீன கிரிக்கெட்டில் மூன்று வகை ஆட்டங்களிலும் ஜொலிக்கும் வீரர்கள் அரிதாகி வருவதை சுட்டிக்காட்டி அவர் இதனை விளக்கியுள்ளார்.

வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான இந்தியாவின் மிக இளம் வீரர் ஆவார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த இளம் திறமையாக அவர் பார்க்கப்படுகிறார். இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தேசிய அணியில் இடம் பெறாத சூர்யவன்ஷி, தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறார்.

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த சூர்யவன்ஷி, டி20 தலைமுறையின் முதல் சூப்பர் ஸ்டாராகக் உருவெடுத்துள்ளார். இதனால், பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்ற ஆர்வம் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விளையாட தனக்கு இருக்கும் விருப்பத்தை சூர்யவன்ஷி ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் மீது சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பங்கேற்ற பியாண்ட்23 கிரிக்கெட் பாட்காஸ்ட்-இல் பேசிய மான்டி பனேசர், "சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் நுழைவதை என்னால் பார்க்க முடியவில்லை. தற்போது டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய இரு வகைகளிலும் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே வீரர் ஹாரி புரூக் மட்டுமே. ஆனால், டெஸ்ட் போட்டிக்குத் தேவையான பேட்டிங் தொழில்நுட்பம் சூர்யவன்ஷிடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை" என்று கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கிளார்க் "ஒரு வீரரால் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் அதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இவர்கள் சிறந்த டெஸ்ட் வீரர்களாகவும், அதே நேரத்தில் டி20 வீரர்களாகவும் திகழ்ந்தனர்."

"தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த சூர்யவன்ஷி போன்ற ஒரு வீரர் டெஸ்ட் போட்டிகளுக்குத் தகுதி பெற்று சாதித்தால், அதைப் பார்ப்பது அற்புதமாக இருக்கும்" என்றார்.சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சூர்யவன்ஷி உள்நாட்டுப் போட்டிகளில் 38.40 சராசரியிலும், 104.92 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டிலும் 192 ரன்கள் எடுத்துள்ளார்.