📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 18, 2026 09:34 AM

 வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 சரிவு

 வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 சரிவு

சென்னை: தமிழகத்தில் நேற்று தங்கம் விலை, சவரனுக்கு, 400 ரூபாய் குறைந்தது.

தமிழகத்தில் நேற்று முன் தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,150 ரூபாய்க்கும், சவரன், 1,05,200 ரூபாய்க்கும் விற்பனையானது .

வெள்ளி கிராம், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 13,100 ரூபாய்க்கு விற்பனையானது.

சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,04,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராம் ஐந்து ரூபாய் குறைந்து, 235 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.