📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 18, 2026 09:04 AM

விசிக பேனர் அகற்றம்.. காவலரை தாக்கிய இளைஞர் கைது!

விசிக பேனர் அகற்றம்.. காவலரை தாக்கிய இளைஞர் கைது!

விசிக பேனர் அகற்றம்.. காவலரை தாக்கிய இளைஞர் கைது!

தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டுக்கான பேனர்கள் அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பைக்கில் சென்ற இளைஞரை தடுத்ததால் வாக்குவாதம் வெடித்து, காவலரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டுக்கான பேனர் அகற்றப்பட்டபோது, காவலரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடக்கும் மாநாட்டுக்காக, தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் கட்சி சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி பேனரை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தஞ்சை மாநகராட்சி அலுவலக வாயிலில் விசிகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடந்தபோது அவ்வழியே பைக்கில் சென்ற இளைஞரை விசிகவினர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின்போது தன்னை தாக்கிய காவலரை திருப்பி தாக்கியதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

விளக்கம் கொடுத்த காவல்துறை..

தஞ்சையில் சாலை மறியலின் போது ஏற்பட்ட தகராறு குறித்து மாவட்ட காவல் துறை விளக்கமளித்துள்ளது. அதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தடுக்கும் நோக்கில் இளைஞர் மீது குறைந்தபட்ச பல பிரயோகம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.எஸ். ஐ கன்னத்தில் அறைந்த இளைஞர் மீது, கடந்த ஆண்டு பெண் ஒருவரைத் தாக்கியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் காவல் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட இளைஞர் வரும் 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.