📅 Sunday, 07 June 2026 IST | வைகாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 07, 2026 12:30 PM

‘வீ தி லீடர்ஸ்’| பாஜகவில் இணையும் முன்பே அண்ணாமலை தொடங்கிய இயக்கம்.. பின்னணி என்ன?

‘வீ தி லீடர்ஸ்’| பாஜகவில் இணையும் முன்பே அண்ணாமலை தொடங்கிய இயக்கம்.. பின்னணி என்ன?

‘வீ தி லீடர்ஸ்’| பாஜகவில் இணையும் முன்பே அண்ணாமலை தொடங்கிய இயக்கம்.. பின்னணி என்ன?

2020 மார்ச் மாதம் ஐபிஎஸ் பணியை விட்டு, பாஜகவில் சேரும் முன்பே அண்ணாமலை தொடங்கிய ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கம், வாரிசு அரசியல் மற்றும் தனிநபர் வழிபாட்டுக்கு மாற்றாக “சாதாரண மனிதர்களின் அரசியல்” என்ற தத்துவத்தை முன்வைக்கிறது. தொழில்நுட்பம், திட்டமிடல், கல்வி, சுகாதாரம், நிலையான வளர்ச்சி, இளைஞர் தலைமைத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு புதிய தலைவர்களை உருவாக்குவதே இதன் குறிக்கோள்.

இப்போது 2026இல், தனி கட்சி முடிவு என்று அண்ணாமலையின் பாதை தென்பட்டாலும், 2020 மார்ச் மாதத்திலேயே அதாவது, ஐபிஎஸ் பணியிலிருந்து விலகி, பாஜகவில் இணைவதற்கு சில மாதங்கள் முன்பே ’வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தை அண்ணாமலை தொடங்கிவிட்டிருக்கிறார். வாரிசு அரசியல், தனிநபர் வழிபாட்டு அரசியல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்து, "சாதாரண மனிதர்களின் அரசியல்" என்ற புதிய தத்துவத்தை தமிழ்நாட்டில் விதைப்பதே நோக்கம் என்று சொல்கிறது இந்த அமைப்பு.

தொழில்நுட்பம், மனிதநேயத்துடன் கூடிய தொகுதி வளர்ச்சி, சமூகப் பொறுப்புள்ள புதிய தலைவர்களை உருவாக்குதல், தரவுகளின் அடிப்படையில் துல்லியமான திட்டமிடல், இந்த மூன்றுதான் வி தி லீடர்ஸ் அமைப்பின் பிரதான நோக்கம் என்று அந்த அமைப்பால் சொல்லப்பட்டிருக்கிறது.

அதேபோல், கல்வி, சுகாதாரம், நிலையான வளர்ச்சி, இளைஞர் தலைமைத்துவம் ஆகிய 4 முக்கியத் தூண்களை மையமாக வைத்தும் இந்த இயக்கம் செயல்படத் தொடங்கியுள்ளது. அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது முதல், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துள்ளனர்.

இதில் இணையும் ஒவ்வொரு உறுப்பினரும் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள், கோவையில் உள்ள 'ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரசியல் மையம்' மூலமாக இவர்களுக்கெல்லாம் பயிற்சியும் அளிக்கப்படும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அமைப்பு பெரிதாக தெரியவந்ததும், பெரிய அளவில் உறுப்பினர்கள் சேர்ந்ததும், பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய பிறகே நடந்தது. அமைப்பை அண்ணாமலை அறிவித்த அடுத்த 24 மணி நேரத்தில், கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் இயக்கத்தில் இணைந்துள்ளனர். இந்த அமைப்பை எப்படியான கட்சியாக அண்ணாமலை உருமாற்றப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.