📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 05, 2026 08:03 PM

விஜய் ரோடுஷோவுக்கு பல மடங்கு செலவு; தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

விஜய் ரோடுஷோவுக்கு பல மடங்கு செலவு; தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

விஜய் ரோடுஷோவுக்கு பல மடங்கு செலவு; தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

மதுரை: தேர்தல் விதிகளை மீறி தவெக வேட்பாளர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த வக்கீல் அமலன், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனு: தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் தேர்தல் விதிகளை மீறி பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இதனை தேர்தல் செலவு கணக்கில் சேர்த்து அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவரான முதலமைச்சர் ஜோசப் விஜய் 2 நாள் ‘ரோடு ஷோ’ மேற்கொண்டார். இதற்கு பெருமளவு செலவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு சட்டமன்ற வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் செலவிடலாம். ஆனால், தாராபுரத்தில் நடந்த முதல்வரின் இரண்டு நாள் ரோடு ஷோவுக்கு மொத்தச் செலவு ரூ.2.27 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதே போல், மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுவுக்காக முதல்வர் விஜய் அக்.2ல் மாமண்டூர் முதல் மாம்பாக்கம் வரை சுமார் 45 கி.மீ. தூரம் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார். இதற்காக ரூ.1.05 கோடி செலவாகியுள்ளது. மேலும் அலங்காரங்கள், கொடிக்கம்பங்கள், வாகனங்கள், இசைக் குழுக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உட்பட ஒரு நாள் ரோடு ஷோவின் மொத்தச் செலவு பல கோடி இருக்கும்.இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 123 (6)-இன் கீழ் ஊழல் நடவடிக்கை ஆகும்.

எனவே, தேர்தல் ஆணையம் வீடியோ கண்காணிப்புக் குழு பதிவு செய்த காணொலிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். காவல்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சிப் பதிவேடுகளை ஆய்வு செய்து, மாவட்டத் தேர்தல் அலுவலரின் விலைப்பட்டியலின்படி செலவுகளை மதிப்பீடு செய்து வேட்பாளரின் செலவு பதிவேட்டில் சேர்க்க வேண்டும். இரண்டு வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, அத்துமீறிய செலவினங்களை அவர்களது அதிகாரப்பூர்வத் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும். முறையான செலவு கணக்கைத் தாக்கல் செய்யத் தவறும் வேட்பாளரை 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.