விளையாட்டு செய்தி// தேசிய வாள்வீச்சு போட்டி தமிழக வீரர்கள் சாதனை
விளையாட்டு செய்தி// தேசிய வாள்வீச்சு போட்டி தமிழக வீரர்கள் சாதனை
Google News Tamil Sportsசென்னை: தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
உத்தரகண்ட் வாள்வீச்சு சங்கம் சார்பில், 21வது 'கேடட்' பிரிவிற்கான தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி, அதே மாநிலத்தின் ருத்ரபூரில் நடந்தது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இதில் தனி நபர் பிரிவில், தமிழக வீரர் ஜோஷிக் ஸ்டெபின்டோ தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அணி பிரிவிலும் தமிழக அணி சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. சென்னையை சேர்ந்த துஷ்யந்திரம், கன்னியாகுமரியை சேர்ந்த ஜோஷிக் ஸ்டெபின்டோ, வினீஷ்குமார் மற்றும் ரித் ஷித் ஆகியோர் தமிழக அணியில் இடம் பெற்று, மாநிலத்திற்கு பெருமை சேர்த்தனர்.