📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 09, 2026 11:33 AM

விராட் கோலி மனசு தங்கம் யா! அமைதியாக செய்த காரியம்..தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை சொன்ன உண்மை

விராட் கோலி மனசு தங்கம் யா! அமைதியாக செய்த காரியம்..தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை சொன்ன உண்மை

விராட் கோலி மனசு தங்கம் யா! அமைதியாக செய்த காரியம்..தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை சொன்ன உண்மை

மும்பை: 2026 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி சௌத்ரி தனது வெற்றிப் பயணத்தில் விராட் கோலி வகித்த முக்கியப் பங்கு குறித்து பகிர்ந்துள்ளார்.

கிளாஸ்கோவில் நடைபெற்ற பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற ஹரியானாவைச் சேர்ந்த சாக்ஷி, தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டத்தில் 'விராட் கோலி அறக்கட்டளை' தனக்கு ஆதரவு அளித்ததாகவும், தனது கவனத்தை சிதறவிடாமல் சிறப்பாகச் செயல்பட அது பெரிதும் உதவியதாகவும் கூறினார்.

இது குறித்து பேசிய சாக்ஷி, "நான் விஜேந்தர் சிங்கைப் பார்த்தே குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். ஆனால், எனது பயணத்தில் விராட் கோலியும் எனக்குப் பெரிதும் ஆதரவாக இருந்துள்ளார். அவர் எனக்கு ஸ்பான்சராக இருந்து உதவினார். அதற்காக அவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சாக்ஷி கூறினார்.

மேலும், எப்போதும் பதற்றப்படாமல் இருக்குமாறும், தேவையில்லாத அழுத்தங்களைத் தவிர்த்து ரிங்கிற்குள் சிறப்பாகச் செயல்படுவதில் மட்டும் கவனம் செலுத்துமாறும் விராட் கோலி தனக்கு எளிய அறிவுரைகளை வழங்கி ஊக்கப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளாஸ்கோவில் சாக்ஷி பெற்ற இந்த வெற்றி ஒரு அபாரமான கம்பேக் ஆகும். காயம் காரணமாக 2022 காமன்வெல்த் போட்டிகள் மற்றும் 2023 ஆசிய போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த சாக்ஷி, தனது எடையை 54 கிலோ பிரிவில் இருந்து 51 கிலோ பிரிவிற்கு மாற்றும் கடினமான முடிவை எடுத்தார். இந்தத் துணிச்சலான உத்தி, இறுதியில் அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய தங்கப் பதக்கத்தை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

இந்திய ராணுவத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான சாக்ஷி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ரூபி ஒயிட்டை 5-0 என்ற கணக்கில் ஒருமனதான தீர்ப்பின் மூலம் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த குத்துச்சண்டை தொடரில் சாக்ஷி ஒரு முக்கிய நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

இத்தொடரில் இந்திய அணி 7 தங்கம் உட்பட மொத்தம் 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. காமன்வெல்த் போட்டிகளின் ஒரே பதிப்பில், குத்துச்சண்டையில் இந்தியா வென்ற 7 தங்கப் பதக்கங்களின் சாதனையை வேறு எந்த நாடும் இதுவரை புரிந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.