Vishwanath And Sons Day 3 Box Office : பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்!
சென்னை: சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில், வாத்தி, லக்கி பாஸ்கர் பட புகழ் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடியை கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், 3-வது நாளிலும் படம் அதிரடியான வசூலை குவித்துள்ளது.
விஸ்வநாதன் அண்ட சன்ஸ்: ஆகஸ்ட் 14ந் தேதி வெளியான இப்படத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, ஜார்ஜ் மரியம், நாசர், சுனில் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ரூ 100 கோடி வசூல்: நடிகர் சூர்யாவை நீண்ட நாட்களாக வெட்டு, குத்து, அதிரடியான ஆக்சன் படங்களே பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் ஓரு ஜாலியான திரைப்படமாக உள்ளதால் வெகுவாக ரசிகர்களின் மனத்தை வென்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் மமிதா பைஜுவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதால், குடும்ப ஆடியன்சுக்கு ரசிக்கும் படமாக இப்படம் உள்ளது. இதனால், விஸ்வநாதன் & சன்ஸ் ரிலீஸான இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
3நாள் வசூல்: முதல் நாள் ரூ. 15.35 கோடியும், இரண்டாம் நாளில் ரூ. 22.25 கோடியும் வசூலித்தது. மூன்றாவது நாளில் 4,876 காட்சிகளின் திரையிடப்பபட்ட இப்படம் ரூ. 20.55 கோடி வசூலை ஈட்டியது. இது சனிக்கிழமையை விட 7.6% குறைவு என்றாலும், தொடர்ந்து இரண்டாவது நாளாக ரூ. 20 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் தனது பலத்தை நிரூபித்துள்ளது. 3 நாட்களில் இந்தியா அளவில் ரூ. 67.22 கோடியாகவும், வெளிநாடுகள் 43.00 கோடியாக அதிகரித்ததை அடுத்து இப்படம் உலகளாவிய மொத்த வசூல் ₹110.22 கோடியை எட்டியுள்ளது. மூன்றாம் நாளான நேற்று தமிழகத்தில் ரூ. 9.50 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 9.50 கோடியும், கர்நாடகாவில் ரூ. 2.90 கோடி வசூலை அள்ளி உள்ளது. தொடர்ந்து படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால் வரும் நாட்களின் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.