📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 17, 2026 09:03 AM

விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது: மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடக்கம்

விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது: மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடக்கம்

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை 4 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்​டும் கூடு​கிறது. இதில் துறை​வாரி​யாக மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்க உள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த ஆக.5-ம் தேதி மாநிலத்​தின் 2026-27-ம் ஆண்​டுக்​கான பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்​தார். அதில் நகராட்சி நிர்​வாகத் துறைக்கு ரூ.29,863 கோடி, நீர்​வளத் துறைக்கு ரூ.9,264 கோடி, வேளாண் மற்​றும் உழவர் நலத் துறைக்கு ரூ.14,984 கோடி என பல்​வேறு துறை​களுக்கு நிதி​கள் ஒதுக்​கப்​பட்​டன.

கல்​லூரி மாணவர்​களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி​யில் 'வெற்றி மடிக்​கணினி திட்​டம்', தலா ரூ.5 லட்​சம் அலகுத்​தொகை​யாக வழங்​கும் ‘வெற்றி வீடு திட்​டம்’ உள்​ளிட்ட திட்​டங்​களும் அறிவிக்​கப்​பட்​டன.

ஆக.6-ம் தேதி வேளாண் பட்​ஜெட்​டை, வேளாண் துறை அமைச்​சர் ஆர்​.​வினோத் தாக்​கல் செய்​தார்.

அதில், தமிழகத்​தில் சிறந்த விவ​சா​யிகளுக்கு நம்​மாழ்​வார், அஞ்​சலை​யம்​மாள் பெயரில் விருதுகள் வழங்​கு​வது, ரூ.785 கோடி​யில் நீர் மேலாண்​மைக்​கான துளித் துளித் தண்​ணீர் திட்​டம், மகளிருக்கு ட்ரோன்​கள் மானி​யத்​தில் வழங்​கும் 'வெற்றி வான்​மகள் திட்​டம்', 'வெற்றி இல்​லத்​தரசி வீட்​டுத்​தோட்​டம் திட்​டம்' உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும் என அறி​வித்​திருந்​தார்.

அதைத் தொடர்ந்​து, கடந்த 7, 10, 11 ஆகிய தேதி​களில் 3 நாட்​களுக்கு இரு பட்​ஜெட்​கள் மீதான பொது​வி​வாதம் நடை​பெற்​றது.

அதில் பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், "பட்​ஜெட்​டில் எந்​தவொரு புதிய திட்​ட​மும் இல்​லை. முந்​தைய திமுக அரசின் திட்​டங்​கள்தான் மாற்றி அமைக்​கப்​பட்​டுள்​ளன" என்​றார்.

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி பேசும்​போது, "மகளிர் உரிமைத் தொகை உயர்​வு, இலவச சிலிண்​டர்​கள், முழு​மை​யான பயிர்க்​கடன் தள்​ளு​படி போன்ற முக்​கிய தேர்​தல் வாக்​குறு​தி​கள் பட்​ஜெட்​டில் இடம்​பெற​வில்​லை" என குற்​றஞ்​சாட்டி இருந்​தார்.

இந்த விவாதத்​தில் எம்​எல்​ஏக்​கள் எழுப்​பிய கேள்வி​களுக்கு கடந்த 12-ம் தேதி, இரு அமைச்​சர்​களின் பதி​லுரை​யுடன் விவாதம் நிறைவடைந்​தது. இதனைத் தொடர்ந்து 4 நாள் விடு​முறைக்​குப் பிறகு சட்​டப்​பேரவை இன்று மீண்​டும் கூடு​கிறது.

இதில் துறை​வாரி​யாக மானிய கோரிக்​கைகள் மீதான விவாதம் தொடங்​கு​கிறது. முதல் நாளான இன்று சுகா​தா​ரம் மற்​றும் வரு​வாய் பேரிடர் மேலாண்​மைத் துறை மீது விவாத​மும், அறி​விப்பு வெளி​யிடலும் நடை​பெற உள்​ளது. இந்த கூட்​டத்​தொடர்​, முதல்​வர்​ பதி​லுரை​யுடன்​ வரும்​ செப்​.8-ம்​ தேதி நிறைவடைகிறது.