📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 01, 2026 03:30 PM

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.200 குறைந்தது

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.200 குறைந்தது

சென்னை: இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் (எல்பிஜி) விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் நடப்புக்கு வந்த புதிய அறிவிப்பின்படி, சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.200 வரை குறைக்கப்பட்டு ரூ.2,906க்கு விற்பனையாகிறது.

கடந்த ஜூலை மாதத்திலும் இதன் விலை ரூ.177 குறைந்தது. தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதாந்தர விலை மாற்ற நடவடிக்கையின்கீழ் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர், உலகச் சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு உருளைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதனால் உணவகங்களில் உணவு, பானங்களின் விலை அதிகரித்திருந்த சூழலில், இந்த தொடர் விலைக்குறைப்பு வணிகர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

அதேவேளையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமும் இன்றி வழக்கம்போல் ரூ.957.50க்கு விற்கப்படுகிறது.