📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 07, 2026 09:31 PM

வறட்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு

வறட்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பாதிப்புகளை சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

எல் நினோ தாக்கம் மற்றும் பருவமழை பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இந்த அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், வறட்சி நிவாரணப் பணிகளுக்காகவும் நிதி பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பேரூராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.96.41 கோடியும், குடிநீர் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.58.55 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.36.65 கோடியும், நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.97.36 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவும், வறண்ட பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரிப் புதுப்பிக்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களைச் சேமித்து தட்டுப்பாடின்றி வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.