“யார் துரோகி?” - தி.மு.க
“யார் துரோகி?” - தி.மு.க - காங்கிரஸ் மோதல்!
மறுவரையறையின் புதிய மசோதா இரண்டாவது முறையாக மீண்டும் வாக்கெடுப்புக்கு வருவதாகக் கூறினார்களே தவிர, அதற்கான எந்தவித முன்னெடுப்பும் இப்போது வரை இல்லை.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தி.மு.க-வினரும் காங்கிரஸாரும் மாறி மாறி ‘துரோகி’ பட்டம் கொடுத்துவருவது தமிழக அரசியலில் அனல் கிளப்பிவருகிறது. “தமிழகத்தின் உரிமை பறிபோகும் எனத் தெரிந்திருந்தும் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் துரோகிகள்” என்று காங்கிரஸார் தி.மு.க-வை நோக்கி அனலைக் கக்க, “பதவிக்காகக் கூட்டணிக்கு துரோகம் செய்த காங்கிரஸார்தான் துரோகிகள்” என்று தி.மு.க-வினரும் பதிலுக்கு அனல் கக்குகின்றனர்.
தமிழக காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமியிடம் பேசினோம். “ `தொகுதி மறுவரையறை திருத்த மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகக் கூடி ஆலோசித்து முடிவெடுப்போம்’ என மாநில அரசே கூட்டத்தைக் கூட்டியது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தால்தானே, ஒட்டுமொத்தத் தமிழ்நாடுமே இந்த மசோதாவை எதிர்க்கிறது என்பது வெளியில் தெரியவரும். ஆனால், ‘மசோதாவை எதிர்க்கிறோம்’ என வெளியில் பேசுகிற தி.மு.க., அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆக, தமிழ்நாட்டின் பலத்தை ஒன்றாகக் காட்டவிடாமல் செய்துவிட்டது தி.மு.க.
‘புதிய மறுவரை மசோதாவையே நாங்கள் எதிர்க்கவில்லை. பாதகமான அம்சங்களைத்தான் எதிர்க்கிறோம். புதிய மசோதாவில் என்னென்ன அம்சங்கள் இடம் பிடித்திருக்கின்றன எனத் தெரியவில்லை. கூட்டத்துக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை. காவிரி விவகாரத்தை திசைதிருப்புகிறார்கள்’ என்றெல்லாம் வழக்கம்போல் முன்னுக்குப் பின்னாக ஏதேதோ காரணங்களைச் சொல்கிறது தி.மு.க. இது போன்ற நடிப்பும், பசப்பு வார்த்தையும் தி.மு.க-வுக்கே உரியவை” என்றார் அழுத்தமாக.
கூட்டணிக் கட்சியாக இருந்து அனைத்தையும் அனுபவித்துவிட்டு, தேர்தல் முடிந்ததும் மாற்று இடம் தேடி ஓடும் தரமற்ற காங்கிரஸ்தான் துரோகி. முதுகில் குத்துவதில் என்றைக்கும் முதல் இடம் எங்களுக்குத்தான் என்று செயல்படும் காங்கிரஸை இனி யாரும் நம்பத் தயாரில்லை” என்றார் ஆவேசமாக.
‘யார் துரோகி?’ போட்டியால் மாநில நலன் பாதிக்கப் பட்டுவிடக் கூடாது!