📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 13, 2026 10:04 AM

யாருமே நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார்: வேளாண் துறை அமைச்சர் பேச்சுக்கு ஓபிஎஸ் பதிலடி

யாருமே நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார்: வேளாண் துறை அமைச்சர் பேச்சுக்கு ஓபிஎஸ் பதிலடி

யாருமே நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார்: வேளாண் துறை அமைச்சர் பேச்சுக்கு ஓபிஎஸ் பதிலடி

சென்னை: யாருமே நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண் துறை அமைச்சர் பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு வேளாண் துறை அமைச்சர் வினோத் பதிலளித்து பேசினார். அவர் தனது பேச்சின் முடிவில் முதல்வர் விஜய்யை வாழ்த்தி பேசினார்.

அப்போது, வேளாண் பட்ஜெட்டை விவசாயிகள் வரவேற்கிறார்கள் என்றும், சிலர் தூண்டுதலின் பேரில் வேளாண் பட்ஜெட்டை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வரும் காலங்களில் நீங்கள் மாற்றத்தை உணர முடியும் என்றும் தெரிவித்தார். அப்போது, எங்கள் முதல்வர் யார் தெரியுமா? என்று முதல்வருக்கு புகழாரம் சூட்டினார்.

இறுதியாக, ‘‘அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது. நீங்கள் (முதல்வர் விஜய்) வந்தபிறகு சூரியனுக்கே வியர்த்தது” என்று கூறினார். அப்போது முன்னாள் முதல்வரும் திமுக எம்எல்ஏவுமான ஓ. பன்னீர்செல்வம், ‘‘இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார் என்பதை கூறிக் கொள்கிறேன். எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சித்தும் சூரியனுக்கு ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்” என்றார்.