📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 13, 2026 06:04 PM

DC Day 6 Box Office

DC Day 6 Box Office

சென்னை: லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் டிசி. இதனை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வாமிகா கபி, சஞ்சனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் படம் வெளியாகி ஆறு நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

இயக்குநராக பல வெற்றி படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கூலி, லியோ ஆகிய படங்கள்தான் அவருக்கு சறுக்கலை உண்டு செய்தன. அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார். இதற்கிடையே ஸ்ருதிஹாசனின் பாடல் ஒன்றில் நடித்த லோகேஷ்; அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். லோகி ஹீரோவாக மாறியது அனைவருக்குமே ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது.

அருண் மாதேஸ்வரனின் ஸ்டைலில் எதிர்பார்ப்பு: அருண் மாதேஸ்வரன் இயக்கம் என்றாலே கதை மட்டுமின்றி கலவரமும் அதீதமாகவே இருக்கும். கேப்டன் மில்லர், சாணிக்காயிதம், ராக்கி என மூன்று படங்களையும் ரத்தம் தெறிக்க தெறிக்கத்தான் கொடுத்திருந்தார். அந்தப் படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோற்றாலும்; அருண் மேக்கிங் ஸ்டைல் அனைவரையும் ஈர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே நிச்சயம் டிசி திரைப்படமும் பெரிய பெயரை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

எப்படி இருக்கிறது படம்?: எதிர்பார்த்தபடியே படம் முழுக்க முழுக்க வயலன்ஸாகத்தான் வந்திருக்கிறது. அதேசமயம் சொல்லப்பட்ட கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை திசை மாறுவது, ஒரு மனிதனுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என பல விஷயங்களை பேசியிருக்கிறார். அது பலரிடம் வரவேற்பை பெற்றதன் காரணமாக; படம் பெரும்பாலானோரிடத்தில் கனெக்ட் ஆகி வரவேற்பை பெற தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் தேறினாரா?: அத்தனையையும் மீறி லோகேஷ் கனகராஜ் மீதுதான் பலரது கவனம் இருந்தது. ஏனெனில் உடன் வாமிகா கபி என்ற பவர்ஃபுல் ஃபெர்ஃபார்மர் வேறு இருக்கிறார். அவரை மீறி இவரால் ஸ்கோர் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியவர்களுக்கு; அதெல்லாம் அசால்ட்டாக முடியும் என்று தனது நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்திருந்தார் லோகி. கண்டிப்பாக இன்னும் சில வருடங்களுக்கு அவர் ஹீரோவாக மட்டுமே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை இப்படம் உருவாக்கியிருப்பதாகவே கருதப்படுகிறது.

வசூல் நிலவரம் என்ன?: அதேபோல் படத்தின் அனிருத்தின் இசையும் தரமாக இருந்தது. இப்படி பல ஏரியாக்களில் படத்துக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால் இது ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது. மீண்டும் லோகேஷ் - அனிருத் - அருண் - சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்த வருடத்தில் இணையவும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

இதுதான் வசூல்: அதன்படி ஆறாவது நாளான நேற்று மொத்தம் ஐந்து கோடி ரூபாயை வசூலித்ததாம். இதுவரை ஆறு நாட்களில் மொத்தம் அந்தப் படம் இந்தியாவில் மட்டும் 37 கோடியே 50 லட்சம் ரூபாய்வரை வசூலித்திருக்கிறதாம். தொடர்ந்து நல்லபடியாக வசூல் செய்துகொண்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை இப்படம் தாண்டிவிடும் என்றும் கருதப்படுகிறது.