📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 02, 2026 10:03 PM

2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா, பாக்., ஆஸ்திரேலியா

2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா, பாக்., ஆஸ்திரேலியா

2027 ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வேயில் அடுத்தாண்டு (2027) நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான அட்டவணை நேற்று (அக். 1) வெளியிடப்பட்டது.

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அடுத்தாண்டு (2027) காந்தி பிறந்தநாளான அக். 2 ஆம் தேதி தொடங்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான குரூப் ஏ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது.

தகுதி சுற்று போட்டி:

2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ, குரூப் பி என இரண்டு பிரிவுகளாக மொத்தமாக 12 அணிகள் பங்கேற்கின்றன. ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் தகுதி சுற்றில் தேர்வாகும் அணிகள் இணையவுள்ளன.

அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கும் போட்டியில் தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணிகள் விளையாடுகின்றன. இந்தியா தனக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அக். 7 ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து அக். 10 ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கும் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

சூப்பர் சீரிஸ் போட்டிகள்:

போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாப்வேயும் நேரடியாகத் தகுதி பெற்ற நிலையில், மற்ற எட்டு அணிகள் செப். 30 ஆம் தேதி வரையிலான ஐ.சி.சி. ஆடவர் ஒருநாள் தரவரிசையின் மூலம் தங்களது இடங்களை உறுதி செய்துள்ளன. மீதமுள்ள நான்கு இடங்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் மூலம் தீர்மானிக்கப்படவுள்ளது.

தகுதிச் சுற்றில் முதலிடம் பெறும் அணி நேரடியாக குழு பிரிவுக்கு முன்னேறும். மற்ற 3 அணிகள் சூப்பர் சீரிஸில் போட்டியிடும் போட்டிகள் அக். 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.