3 ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்: நான் மோசமான ஆளு
வேலுரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
திமுக-வை பார்த்து சவால் விடுகிறார் விஜய். கோப்புகள் எல்லாம் ரெடியா இருக்கு, டேபிளில் இருக்கிறது. நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார். அவிழ்ப்பதுதான் உன்னோட வேலை. இந்த பூச்சாண்டி காட்டுவதெல்லாம் வேண்டாம். தணிக்கை செய்யப்பட்டது என்கிறார்.
ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சிஏஜி அறிக்கை வைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். அதேபோல் சட்டசபையில் சிஏஜி ரிப்போர்ட்டை வைப்பார்கள். அந்த சிஏஜி ரிப்போர்ட்தான் இந்த மூன்றும்.
எந்தவொரு சிஏஜி ரிப்போர்ட்டும் அரசாங்கத்தை பாராட்டி இருக்காது. ஆடிட் என்பது மாநகராட்சி முதல் அரசாங்கம் வரை நடக்கக் கூடியது. உடனே ஊடகங்கள் எல்லாம், பத்திரிகை எல்லாம் மூன்று பைல்கள் இருக்கிறது..,
ஜெயலலிதா என்கிட்ட வால் ஆட்டிச்சி
இதேபோல்தான் ஆணவமாக பேசினார். அன்னைக்கு ஜெயலலிதா பெரிய தப்பு எதுவும் செய்யல. டான்சி நிலத்தை வாங்கினாங்க. அரசு நிலத்தை வாங்கக் கூடாது. நான் டான்சி நிலத்தை வாங்கியது தவறு என ஒரு அறிக்கை கொடுத்தது. திமுக-வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது. கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளை காணவில்லை என்று சொன்னார்.
வாய்க்கொழுப்பு
மூன்று பேர்தான் திமுக-வில் வெற்றி பெற்றார்கள். கலைஞர் ராஜினாமா செய்துவிட்டார். இருவர் அவைக்கு சென்றார்கள். அந்த தைரியத்தில் அந்த அம்மா, நான் டான்சி நிலத்தை வாங்கினேன். வாங்கினால் என்ன தப்பு என்று சொன்னார்.
இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேசினார்.