📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 27, 2026 01:00 PM

ஆர்.டி.ஐ. சட்டத்தில் இருந்து சட்டம்

ஆர்.டி.ஐ. சட்டத்தில் இருந்து சட்டம்

ஆர்.டி.ஐ. சட்டத்தில் இருந்து பொது துறையிலுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், பொது துறையின் கீழுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான தகவல்களை பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உளவு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அமைப்பாக அறிவித்து இந்த விலக்கு அளிக்கப்படுகிறது.

இதனால், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விசாரணை ஆணையம் தொடர்பான நியமனங்கள், வகுப்புவாத, சாதிய மோதல்கள், காவல் துறையின் கைது நடவடிக்கைகள், போலீஸ் காவல், கைதிகளின் மரணம், போலீஸ் விசாரணை அறிக்கைகள் பெறுவதிலும் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

கட்சி போராட்டம்

சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர சீராய்வு கூட்டம், தலைமை செயலாளர் அறிவுறுத்தலின் பேரிலான சிறப்பு சட்டம் மற்றும் ஒழுங்கு கூட்டங்கள் உள்ளிட்ட விவரங்களை பெறுவதிலும் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

இதன்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள், மாணவர், விவசாயி மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போராட்டம், அவதூறு கட்டுரைகள், செய்தி துணுக்குகள், பேச்சுகள் உள்ளிட்ட விசயங்கள் தொடர்பான தகவல்களையும் பெற முடியாது.

சட்டம் மற்றும் ஒழுங்கு விசயத்தில், அனைத்து தகவல்களையும் மக்களுக்கு வழங்க முடியாது என தெரிவித்து, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விசயத்தில், இந்த முக்கிய முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.