📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 01, 2026 03:03 AM

ஆதாரமில்லாமல் ஊழல் குற்றச்சாட்டு; ஆதாரமிருந்தால் நடவடிக்கை எடுங்க; திமுக உறுப்பினர்கள் பதிலடி..

ஆதாரமில்லாமல் ஊழல் குற்றச்சாட்டு; ஆதாரமிருந்தால் நடவடிக்கை எடுங்க; திமுக உறுப்பினர்கள் பதிலடி..

ஆதாரமில்லாமல் ஊழல் குற்றச்சாட்டு; ஆதாரமிருந்தால் நடவடிக்கை எடுங்க; திமுக உறுப்பினர்கள் பதிலடி..

சென்னை: எங்கள் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்றால் அதற்கு ஆதாரத்தை வெளியிடுங்கள். சட்டப்படி, எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சட்டப்பேரவையில், திமுக கொறடா எ.வ.வேலு மற்றும் மூத்த திமுக உறுப்பினர் கே.என்.நேரு ஆகியோர் தவெக அமைச்சர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மாறி மாறி திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜூனா மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோருக்கு திமுக அவையிலேயே கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரான கே.என்.நேரு, “எதற்கெடுத்தாலும் ஊழல்.. ஊழல் என்று சொல்லக்கூடாது. அதிகாரம் உங்களிடம் தானே உள்ளது. கண்டுபிடியுங்கள், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.” என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு பேசினார். தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள். ஒரு வருடம் கழித்து நாங்கள் ஆய்விற்குச் செல்வோம். அப்போது நாங்கள் கேள்வி கேட்போம் என்றார்.

பின்னர் சில நிமிடங்கள் கழித்து வேறொரு சந்தர்ப்பத்தில் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, ஊழல் நடந்துள்ளது என்றால் அதற்கு ஆதாரத்தை வெளியிடுங்கள். சட்டப்படி, எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதைவிட்டுவிட்டு, எப்போது பேசினாலும் “ஊழல்... ஊழல்...” என ஆதாரமில்லாமல் பேசி, தி.மு.க மீது மக்கள் மத்தியில் அவதூறு பரப்பும் செயலில் தான் நீங்கள் ஈடுபட்டு வருகிறீர்கள் என நேருக்குநேர் காட்டமாக விமர்சித்தார்.

சபாநாயரின் தொடர்ச்சியான அட்வைஸ்:

இதனை தொடர்ந்து விவகாரத்தை முடித்து வைக்க நினைத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் பேசும் போது ஆதாரம் இல்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மக்களிடம் தவறான செய்தி போய்விடும். இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனால் அவர் அறிவுறுத்துவது முதல் முறையல்ல; சபாநாயகரின் பேச்சுக்கு மதிப்பளிக்காமல் பல நாட்களாக இதே வேலையை தவெக அமைச்சர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.