📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 01, 2026 12:04 AM

சட்டசபையில் எதிர்க்கட்சியினர் வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்டிற்கு இடம்

சட்டசபையில் எதிர்க்கட்சியினர் வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்டிற்கு இடம்

தமிழக சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் திடீரென எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் எனவும் இல்லையென்றால் அமைச்சர் பதவியில் இருந்தும் விலக தயார் என்று காங்கிரஸ் அமச்சர் ராஜேஷ்குமார் நேற்று பேசியிருந்த நிலையில் தாரகை கத்பர்ட் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது சிறிது நேரம் பரபரப்பை கிளப்பியது.

சட்டமன்றக்குழு தலைவர்

எனினும், சட்டமன்றக்குழு தலைவராக தாரகை கத்பர்ட் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அவருக்கான இடம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக சட்டமன்றக்குழு தலைவராக உள்ள சவுமியா அன்புமணி அருகில் தாரகை கத்பர்ட் அமைர்ந்துள்ளார். தாரகை கத்பர்ட்டிற்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய திமுக கொறடா எ.வ.வேலு, தங்கள் பக்கம் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சபாநாயகர் விளக்கம்

தமிமுன் அன்சாரி, ஜவஹிருல்லா ஆகியோருக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று எ.வ. வேலு கோரிய நிலையில், அது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.