📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 10, 2026 02:03 AM

Amoris Laetitia: ஆசியக் குடும்பங்களின் அனுபவங்களும் டிஜிட்டல் உலகின் சவால்களும்

Amoris Laetitia: ஆசியக் குடும்பங்களின் அனுபவங்களும் டிஜிட்டல் உலகின் சவால்களும்

Amoris Laetitia: ஆசியக் குடும்பங்களின் அனுபவங்களும் டிஜிட்டல் உலகின் சவால்களும்

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட அன்பின் மகிழ்ச்சி திருத்தூது அறிவுரை மடலின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற சந்திப்பின் இரண்டாம் நாளில், ஆசியக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சமயப் பிளவுகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தாக்கங்கள் குறித்து கோவா மற்றும் டாமன் பேராயர் கர்தினால் பிலிப்பே நேரி ஃபெர்ராவ் அவர்களும், பேராசிரியர் வின்சென்சோ ரோசிட்டோ அவர்களும் எடுத்துரைத்தனர்.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கிறிஸ்தவக் குடும்பங்கள் சமயப் பகைமை, வறுமை, வேலையின்மை மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை ஆகியவற்றை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டிய கர்தினால் அவர்கள், இத்தகைய சூழல்கள், தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கும் அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பதற்கும் சவாலாக அமைகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் நலிவுற்றோரைக் குடும்பங்கள் அக்கறையுடன் பராமரிப்பதன் வழியாக நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தொடர்ந்து வளர்த்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

குடும்பங்களின் அனுபவங்களுக்குச் செவிமடுத்து, அவர்களை வாழ்நாள் முழுவதும் உடனிருந்து வழிநடத்துவதோடு, திருஅவையின் மறைப்பணியில் அவர்களைப் பங்காளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பேராசிரியர் வின்சென்சோ ரோசிட்டோ அவர்கள், குடும்ப உறவுகளிலும் குழந்தைகளின் வளர்ப்பிலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை எடுத்துரைத்தார். வன்முறை, புலம்பெயர்வு மற்றும் பாதுகாப்பற்ற சூழல்கள் குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.

மாறிவரும் சூழல்களுக்கேற்ப, குடும்பங்களுடன் இணைந்து நற்செய்தியை வாழ்வதற்கான புதிய வழிகளைக் கண்டறியவும், திறந்த மனதுடனும் செவிமடுத்தலுடனும் குடும்ப மறைப்பணியை முன்னெடுக்கவும் இருவரும் அழைப்பு விடுத்தனர்.