📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 11, 2026 02:04 AM

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வணக்கம் தெரிவித்த முதல்வர்

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வணக்கம் தெரிவித்த முதல்வர்

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வணக்கம் தெரிவித்த முதல்வர்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2 நாள் விடுமுறை முடிந்து தமிழக சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் காலை 9.28 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்தார். அவர் சட்டப்பேரவைக்குள் வந்தவுடன் நடந்து சென்று அனைத்து எம்எல்ஏக்களையும் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் தெரிவித்தார். அப்போது அமைச்சர் ராஜேஷ்குமார் எழுந்து, உங்கள் பார்வை எங்கள் மேல் பட்டால் நல்லா இருக்கும் என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது. உடனே முதல்வர் விஜய் அவர் இருக்கும் இடத்திற்கு சென்றும் வணக்கம் தெரிவித்து விட்டு, தனது இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து, தமிழக சட்டசபையில், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார்.