Biggboss 10 Contestants : பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இல் பங்கேற்கப்போகும் போட்டியாளர்களின் பட்டியல்
Biggboss 10 Contestants : பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இல் பங்கேற்கப்போகும் போட்டியாளர்களின் பட்டியல்
BiggBoss Tamil Contestants : பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன
பிக்பாஸ் தமிழின் 10 ஆவது சீசன் வரும் செப்டம்பர் 6 முதல் தொடங்க இருக்கிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த சீசனில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக்பாஸ் 10 இல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 10 தமிழ்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ஹிந்தியில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பின்னர் பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட நிலையில், தமிழிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய முதல் சீசனில் தொடங்கி, அடுத்தடுத்த சீசன்களிலும் சினிமா, சின்னத்திரை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். தற்போது இந்த நிகழ்ச்சி 10வது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது.
பிக்பாஸ் தமிழ் 10 போட்டியாளர்கள்
வழக்கம்போல இந்த சீசனிலும் சினிமா மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த பிரபலங்களுடன், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கவனம் பெற்றவர்களும், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களும், பொதுமக்களில் இருந்து தேர்வு செய்யப்படும் போட்டியாளர்களும் இடம்பெற உள்ளனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 10ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியலில் இடம்பெறக்கூடிய பெயர்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. அந்த போட்டியாளர்களின் பட்டியல் இதோ
1. ஜாய் கிரிசில்டா (ஸ்டைலிஸ்ட்)
2. பிரியா ராமன் (நடிகை)
3. ஜனனி அசோக் (விஜய் டிவி)
4. டோலி (விஜய் டிவி)
5. முரளி விஜய் (முன்னாள் கிரிக்கெட் வீரர்)
6. ஆர்யன் (சின்னத்திரை நடிகர்)
7. புவியரசு (சின்னத்திரை நடிகர்)
8. இது பிரசாந்த் (யூடியுபர்)
9. நவின் (விஜய் டிவி)
10. வினோத் பாபு (விஜய் டிவி சீரியல் நடிகர்)
11. குறைஷி (விஜய் டிவி நகைச்சுவை நடிகர்)
12. சிந்தியா வினோலின் (டான்சர் சாண்டியின் மருமகள்)
13. அக்ஷிதா அசோக் (விஜய் டிவி)
14. ஃபரினா (விஜய் டிவி)
15. ஹேமா ராஜ்குமார் (விஜய் டிவி)
16. பானுமதி (விஜய் டிவி)
17. கரிஷ்மா (பொது மனிதர்)
18. முனியம்மா (பொது மனிதர்)
19. ஜேசன் கௌஷி (பொது மனிதர்)
20. ஸ்வப்னா (ஒப்பனை கலைஞர்)
21. கயு ஸ்ரீ (விஜய் டிவி)
இந்த பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் தானே தவிர அதிகாரப்பூர்வ பட்டியல் கிடையாது
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி