📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 09, 2026 11:03 PM

சாதனை வீரர்களை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் விஜய்; சமூக வலைத்தளங்களில் வீரர்கள் நன்றி!

சாதனை வீரர்களை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் விஜய்; சமூக வலைத்தளங்களில் வீரர்கள் நன்றி!

சாதனை வீரர்களை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் விஜய்; சமூக வலைத்தளங்களில் வீரர்கள் நன்றி!

முதலமைச்சரிடம் வாழ்த்தும் ஊக்கத்தொகையும் பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சர்வதேச விளையாட்டு நட்சத்திரங்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆர். பிரக்ஞானந்தா ஆகியோர் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Published : October 9, 2026 at 5:03 PM IST

சென்னை: சர்வதேச விளையாட்டு அரங்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாடு வீரர்களை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேரில் அழைத்து பாராட்டியதுடன், அவர்களுக்கான ஊக்கத்தொகையையும் வழங்கினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் தொடர்களில் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கான பிரம்மாண்ட பாராட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில், சாதனையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், காசோலைகளை வழங்கி அவர்களை கௌரவித்தார்.

மேலும், தமிழக விளையாட்டுத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் 'கனவு ஒலிம்பிக்' (Dream Olympics) என்ற புதிய திட்டத்தையும் அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், கிராமப்புற மற்றும் பின்தங்கிய சூழலில் இருக்கும் திறமையான இளம் வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உலகத் தரத்திலான கட்டமைப்பு, சர்வதேசப் பயிற்சிகள் மற்றும் முழுமையான நிதியுதவிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள், ஊக்கத்தொகை விவரம்:

செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் முதலமைச்சர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், பதக்கம் வென்ற வீரர்களை மேடைக்கு அழைத்ததோடு மட்டுமன்றி, அவர்களின் வெற்றிக்குப் பின்னால் தூணாக நின்ற அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களையும் மேடைக்கு அழைத்து, பொன்னாடை போர்த்தி, அவர்களுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

முதலமைச்சரிடம் வாழ்த்தும் ஊக்கத்தொகையும் பெற்றதைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

An honour that makes it even more special. Grateful to receive this recognition from the Hon’ble Chief Minister of Tamil Nadu, C. Joseph Vijay. A proud moment, and a reminder to keep striving for excellence! @CMOTamilnadu https://t.co/5wfqOEneJV

இதில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது எக்ஸ் பதிவில், "இந்த அங்கீகாரம் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய்யிடம் இருந்து இந்த பாராட்டைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும், தொடர்ந்து மிகச்சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கும், சாதனைகளை நோக்கிப் பயணிப்பதற்கும் இந்தத் தருணம் எனக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞாந்தாவும் தனது எக்ஸ் பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர், விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் (SDAT) எனது நன்றிகள். நமது உழைப்பிற்கு கிடைக்கும் இந்த அங்கீகாரம், நமது மாநிலத்திற்காகவும் நாட்டிற்காகவும் இன்னும் பல சாதனைகளைப் படைக்க எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற சாதனை விளையாட்டு வீரர்களுடன் இந்த தருணத்தைப் பகிர்ந்துகொள்வது பெருமகிழ்ச்சி அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Thanks to Honourable @CMOTamilnadu and the Sports Minister and SDAT for the support! Getting recognition for the efforts pushes us to achieve more for our state and our country! Inspiring to be among the athletes who won medals in Asian games! https://t.co/NtSkbmfkDA