📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 30, 2026 05:04 PM

சென்னை| சூட்கேஸில் வைத்து ரயிலில் அனுப்பப்பட்ட பெண்ணின் உடல்.. வெளிமாநில தம்பதி கைது!

சென்னை| சூட்கேஸில் வைத்து ரயிலில் அனுப்பப்பட்ட பெண்ணின் உடல்.. வெளிமாநில தம்பதி கைது!

சென்னை| சூட்கேஸில் வைத்து ரயிலில் அனுப்பப்பட்ட பெண்ணின் உடல்.. வெளிமாநில தம்பதி கைது!

கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த நிஷா கொலை வழக்கில், மணிப்பூரில் இருந்து கைது செய்யப்பட்ட அஸாம் தம்பதியினர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட மோதலில் நிஷா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து ரயிலில் அனுப்பிய கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பெண்ணை கொலை செய்து உடலை சூட்கேஸில் வைத்து ரயிலில் அனுப்பிய விவகாரத்தில், அஸாம் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

ஆக்ரா ரயில் நிலையத்தில் சூட்கேஸில் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த நிஷா கொலை செய்யப்பட்டதும், உடலைத் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து ரயிலில் அனுப்பியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அஸாமைச் சேர்ந்த மணிக் உத்தீன் லஷ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மஞ்ஜி ஆகியோரை தேடிவந்த கூடுவாஞ்சேரி காவல் துறையினர், மணிப்பூரில் வைத்து அவர்களை கைது செய்தனர். விசாரணையில் திருமணத்தை மீறிய உறவால் கொடூரக் கொலை நடந்தது தெரியவந்தது.