📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 22, 2026 07:06 PM

சிங்கப்பூர் கடல்நீரில் எண்ணெய்க் கலவை கலந்த சம்பவம்: ஷெல் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் கடல்நீரில் எண்ணெய்க் கலவை கலந்த சம்பவம்: ஷெல் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரின் கடல் நீரில் கடந்த 2024ஆம் ஆண்டு எண்ணெய்க் கலவை கலந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக ஷெல் சிங்கப்பூர் நிறுவனம் மீது செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

கடல் மாசுபடுதலைத் தடுப்பதற்கான சட்டத்தின்கீழ் அக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அந்த இரு சம்பவங்களும் புலாவ் புக்கோம் கெச்சில் பகுதியிலுள்ள ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் எரிசக்தி மற்றும் ரசாயன வளாகத்துடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.

முதல் சம்பவம் 2024 அக்டோபர் 20ஆம் தேதி நிகழ்ந்தது.

ஷெல் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 10 செ.மீ. விட்டம் கொண்ட கழிவு எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட துளை வழியாக ஏறத்தாழ 40 டன் அளவிலான கலவை வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

காலை 8 மணியளவில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் குறித்து துறைமுக அதிகாரியிடம் உடனடியாகத் தகவல் தெரிவிக்கத் தவறியதாக ஷெல் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2024 டிசம்பர் 26 மற்றும் 28ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டாவது சம்பவம் நிகழ்ந்தது. அப்போது, கிட்டத்தட்ட 485 கிலோ முதல் 956 கிலோ வரையிலான எண்ணெய்க் கலவை சிங்கப்பூர் கடல்நீரில் கலந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.