சிங்கப்பூர் பிரமுகர்களுக்கு தேசிய தின விருதுகள்
சிங்கப்பூர் பிரமுகர்களுக்கு தேசிய தின விருதுகள் சிங்கப்பூர் 61வது தேசிய தினம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. தேசிய தினத்தையொட்டி சிங்கப்பூர் பிரமுகர்கள் உயரிய விருது பெற்றனர். பி.பி.எம் எனும் பொதுச் சேவை நட்சத்திரப் பதக்கம் மூன்று தமிழர்களுக்கு வழங்கப்பட்டுப் பெருமைப் படுத்தியது. 70 வயது ஜெயதேவ் - கே.கணேசன் மற்றும் கௌசல்யா தேவி ராமச்சந்திரன் ( 85 ) ஆகியோர் இவ்விருது பெற்றனர். பொது நிர்வாகத்திற்கான தங்கப் பதக்கம் நீதித்துறை ஆணைய செயலாளர் பி.சிவசண்முகத்திற்கு அளிக்கப்பட்டது .உட்லண்ட்ஸ் மருத்துவ மனை மூத்த ஆலோசகர் மோகன் திருச்சிற்றம்பலம் வெள்ளிப் பதக்கம் பெற்று கவுரவிக்கப்பட்டார். ஆசிரியர்கள் இருவர் பாராட்டுப் பதக்கம் பெற்றனர். பார்ட்லி உயர்நிலைப் பள்ளி மூத்த ஆசிரியர் லூயிஸ் ஐசக் குமார் மற்றும் தெம்பனீஸ் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நல்லு தினகரன். பொதுச் சேவைப் பதக்கம் இந்து அறக்கட்டளை வாரிய செயலாளர் சதீஷ் அப்பு மற்றும் போதைப் பொருள் மறுவாழ்வு மைய பார்வையாளர் குழுத் தலைவர் தேவேந்திரனுக்கும் வழங்கப்பட்டது. சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமாரும் பதக்கம் பெற்றவர்களுள் அடங்குவர். - நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்