📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 22, 2026 01:05 AM

சிங்கப்பூரில் தமிழ் கற்றல் தளம் உதயம்

சிங்கப்பூரில் தமிழ் கற்றல் தளம் உதயம்

உலகெங்கிலும் வாழும் மாணவர்கள் தமிழ்மொழியை இலகுவாகவும் இலவசமாகவும் கற்றுக்கொள்ள இணையத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது, சிங்கப்பூர் கணினி நிறுவனமான Infocom Consultants. ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் செயலாளரும், கணிதப் பேராசிரியருமான P M A அமானுல்லாஹ், இந்த இணையத்தளத்தை வடிவமைத்துள்ளார்.

பள்ளி ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கு தமிழ் பயிற்சி அளிக்க இந்த தளம் மிகவும் ஏற்றது. கை தொலைபேசி மற்றும் டேப்லெட் கருவிகளிலும் அனைவரும் இந்த தளத்தைப் பயன்படுத்தலாம். “சொற்கள்” என்றழைக்கப்படும் இந்த இணையத்தளம் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பயனாளர்களை தன் வசம் ஈர்த்துள்ளது.

மேல் விபரங்களை www.sorkkal.com எனும் இணைய முகவரியில் காணலாம்.