📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 25, 2026 08:04 PM

சிங்கப்பூர் வானில் ஹார்வெஸ்ட் மூன் மற்றும் சனிக் கோள்

சிங்கப்பூர் வானில் ஹார்வெஸ்ட் மூன் மற்றும் சனிக் கோள்

வான்வெளியில் செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் ‘ஹார்வெஸ்ட் மூன்’ எனப்படும் முழு நிலவைக் காணமுடியும்.

அந்த நாள்களில் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் சனிக் கோளும் வானில் தெரியும். இது விண்வெளி ஆர்வலர்களுக்கு உற்சாகமூட்டும் செய்தியாக மாறியுள்ளது

வளையங்கள் சூழ்ந்த சனிக் கோள்,செப்டம்பர் 26ஆம் தேதி நிலவுக்கு மிக அருகில் தோன்றும் என்றும் சிங்கப்பூர் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.

இரவில் நிலவைத் தொடர்ந்து சனிக் கோள் தோன்றும் என்றும், நிலவின் இடம் இரவு முழுவதும் மாறும் என்றும் நிலையம் அறிக்கையில் குறிப்பிட்டது.

‘ஹார்வெஸ்ட் மூன்’ என்பது இலையுதிர் காலம் தொடங்குவதற்கு முன்னர் வரும் முழு நிலவாகும்.

சூரியன் மறைந்த சிறிது நேரத்திலேயே நிலவு உதயமாகி, மாலையில் அதிக நிலவொளியை வழங்குகிறது. பாரம்பரியமாக, இது விவசாயிகளை மாலை நேரங்களில் கூடுதல் வேலை செய்யவும் பயிர்களை அறுவடை செய்யவும் வெளிச்சம் தருகிறது.

இலையுதிர் கால நடுப்பகுதி திருவிழாவிற்கு அடுத்த நாளான செப்டம்பர் 26 இரவு முழு நிலவு உதயமாகத் தொடங்கி, நள்ளிரவு தாண்டி அதிகாலை 12.49 மணிக்கு அதன் உச்சத்தை எட்டும்.

சனிக் கோளுக்கும் நிலவுக்கும் இடையே பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் இருந்து அவை பிரிக்கப்பட்டிருந்தாலும், பூமியிலிருந்து பார்க்கும்போது, வளையங்களைக் கொண்ட சனிக் கோள் இரவு வானில் நிலவைத் தொடர்வது போல் தோன்றும் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் கூறியுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

வானிலை நன்றாக இருந்தால் சிங்கப்பூரிலிருந்து சனிக் கோளை வெறும் கண்ணால் காண முடியும். இருப்பினும், சனிக் கோளின் வளையங்களைக் காணத் தொலைநோக்கி தேவைப்படும் என்று அந்த நிலையம் தெரிவித்தது.