📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 25, 2026 08:04 PM

சுற்றுப்புறப் பாதுகாப்பு; சிங்கப்பூர், ஜப்பான் இடையே புதிய ஒப்பந்தங்கள்

சுற்றுப்புறப் பாதுகாப்பு; சிங்கப்பூர், ஜப்பான் இடையே புதிய ஒப்பந்தங்கள்

சிங்கப்பூரும் ஜப்பானும் சுற்றுப்புறப் பாதுகாப்புத் துறையில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் இது தொடர்பாக இரண்டு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவும் ஜப்பானின் அமைச்சர்களும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

முதல் ஒப்பந்தப்படி புதிதாக உருவாகும் மாசுகளை நிர்வகிப்பது, நிலத்திலிருந்து மாசுகளை அகற்றுவது ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

மேலும், கரியமில வாயுவைக் குறைப்பது, காற்றின் தரம், கழிவு மேலாண்மை குறித்தும் நாடுகள் கவனம் செலுத்தும்.

இரண்டாவது ஒப்பந்தம், பருவநிலை அறிவியல், பருவநிலைக்கேற்ப மாறிக்கொள்ளும் உத்திகள் உட்பட கடலோரப் பாதுகாப்பு, வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் மேலாண்மை, வானிலைச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

புதிய தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பார்ப்பதற்கும் இரு நாடுகளின் நிறுவனங்கள் இடையே கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும் புதிய ஒப்பந்தம் வழிவகுக்கும்.

கூட்டு நிகழ்ச்சிகள், பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பிற்குச் சிங்கப்பூர் தலைமை தாங்கவுள்ளது. அப்போது இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2026ஆம் ஆண்டு, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் இடையிலான தூதரக உறவின் 60ஆவது ஆண்டு நிறைவைக் குறிப்பதும் தனிச்சிறப்பானது.

இதற்கிடையே, சிங்கப்பூர் தண்ணீர் சங்கத்தின் கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர் ஜப்பானுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 40 மூத்த பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை அங்கு பல்வேறு இடங்களைப் பார்வையிடுவார்கள்.

பின்னர் அக்குழு தோக்கியோ விரிகுடாவில் உள்ள உயர் அலை தடுப்பு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் சென்று ஆய்வு செய்வார்கள்.

மேலும், பொறியியல் தீர்வுகள், புத்தாக்கம், அறிவார்ந்த அமைப்புகள் ஆகியவற்றில் கூட்டாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் அக்குழு ஆராய உள்ளது.