📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 24, 2026 03:00 PM

சூப்பர் 6...எந்தெந்த குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர்!

சூப்பர் 6...எந்தெந்த குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர்!

சூப்பர் 6...எந்தெந்த குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர்!

சூப்பர் 6 திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், அதற்கான சில விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எந்தெந்த குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இரு தின விடுமுறைக்கு பின்னர் இன்று கூடிய நிலையில், முதலில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்ப இல்லத்தரசிகளுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், அதன் முதற்கட்டமாக அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் மூலம் 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கப்படும்.

குறிப்பாக, இத்திட்டத்தால் குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும், இத்திட்டத்திற்கான சில விதிமுறைகளையும் இந்த தவெக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 3 இலவச சிலிண்டர்கள் பெறும் குடும்பங்களுக்கான விதிமுறைகளாக,

1. 3 எரிவாயு சிலிண்டர்களுக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும்.

2. குறிப்பாக, இந்த இலவச சிலிண்டர்கள் பெறும் குடும்பங்களின் ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்திற்குக் குறைவாகவும், பின்தங்கிய குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

3. சிறு மற்றும் குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளி குடும்பங்கள் மற்றும் திருநங்கை குடும்பங்கள் உள்ளிட்டவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு இந்த சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளதாக தவெக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவுபடுத்தியுள்ள தவெக அரசு, அதற்கான சில விதிமுறைகளையும் தெரிவித்துள்ளது. அதன்படி,

மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணிக்கும் வெற்றி பயணத் திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும்.

மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்திற்கு வருமான உச்ச வரம்போ, மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடோ இல்லை. திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றிப் பயணிக்கலாம்.

மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ளும் சாதாரண பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்கலாம்.

மாநகரம், நகரங்களில் இயங்கும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ளலாம்.

வெற்றி பயணம் திட்டத்தில் டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றிப் பயணிக்கலாம். இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும்.

இப்படி திட்டத்திற்கான முக்கிய அறிவிப்புகளை தவெக அரசு அறிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.