Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
CMCHIS Health Insurance: : மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டால் பல லட்சங்கள் தேவை என்ற நிலையில், ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு ரூபாய் செலவு இல்லாமல் ரூ.5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற காப்பீட்டு திட்டத்தை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஒரு ரூபாய் செலவு இல்லாமல் மருத்துவ சிகிச்சை
நாளுக்கு நாள் மாறி வரும் நவீன காலத்தில் நோய்களும் அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மருத்துவமனையில் அதிகரித்து வருகிறது. இது ஒரு பக்கம் என்றால் திடீரென ஏற்படும் விபத்து போன்றவைகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பணம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அதுவே ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களால் லட்சக்கணக்கில் செலவு செய்து சிகிச்சை எடுப்பது என்பது முடியாத காரியம். எனவே அரசின் சார்பில் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 1 லட்சம் ரூபாய்க்கு இலவச மருத்து சிகிச்சைக்கான காப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 இலட்சம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக உயர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு அரசு செலவில், பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சிகிச்சைகளை பணமில்லா முறையில் பெற உதவும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு திட்ட பயன்கள்
அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு காப்பீட்டு வசதி உள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
தேவையான ஆவணங்கள்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அட்டையைப் பெற, உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள CMCHIS அட்டை வழங்கும் அல்லது சேர்க்கை மையத்தை அணுகலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு தகுதி உறுதி செய்யப்பட்டு அட்டை வழங்கப்படும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்ற பிறகு, CMCHIS திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இணைக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி