📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 19, 2026 08:02 PM

Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு

Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு

Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்து மகிழ்ச்சி அளித்த நிலையில், மாலையில் அதிரடியாக விலை உயர்ந்து அதிச்சி கொடுத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த ஒரு சில வாரங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலையில் தங்கத்தின் விலை கணிசமான அளவில் குறைந்து, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. ஆனால், மாலையில், அதிரடியாக சவரனுக்கு 1,560 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

திடீரென உயரும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த ஆண்டு தொடர்ந்து உயர்ந்து நகைப்பிரியர்களை அதிரவைத்தது. அதிலும் இந்தாண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களுக்கு தலை சுற்றலை தந்தது. இதைத் தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலையானது குறையத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், அடுத்த சில மாதங்களில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் தங்கத்தின் விலையானது உயரத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் மீது முதலீடு அதிகரித்தது. இதனால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. தற்போது போர் பதற்றம் சற்று குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய்க்கு பதிலாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை திரும்பியுள்ளதால், தங்கம் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலை இன்று காலை கணிசமாக குறைந்தது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு 85 ரூபாய் குறைந்து 14,205 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 1,13,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மாலையில் தங்கத்தின் விலை அதிரடி உயர்வைக் கண்டது. அதன்படி, கிராம் ஒன்றிற்கு 195 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,560 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன், 1,15,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை என்ன.?

வெள்ளியின் விலையானது இன்று காலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் குறைந்து, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கத்தைப் போல் விலை உயராமல், இன்று மாலையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி