Hi X Review
சென்னை: விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஹாய். முதலில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருந்த அந்தப் படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன்படி நாளை தியேட்டர்களில் படம் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் படம் பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.
டாடா திரைப்படம் கவினுக்கு மெகா ஹிட்டாக அமைந்தது. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த ஸ்டார், ப்ளடி பெக்கர், கிஸ், மாஸ்க் ஆகிய நான்கு படங்களுமே அவருக்கு தோல்வியைத்தான் கொடுத்தன. இப்படிப்பட்ட சூழலில் விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் நயன்தாராவும் நடித்திருக்கிறார்.
நாளை படமானது தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கும் சூழலில்; நேற்று படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.
Toxic Blue Sattai Maran Review - டாக்சிக் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
ஹாய் எக்ஸ் விமர்சனம்: படம் பார்த்த ஒரு ரசிகர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "ஹாய் திரைப்படம் நல்ல காமெடி மற்றும் பொதுழுபோக்கு அம்சங்களுடன் இருக்கிறது. முதல் பாதி நகரத்தை மையமாக வைத்து நகர்கிறது. கவின், நயனுக்கு இதில் முக்கியமான காட்சிகள் இருக்கின்றன. இரண்டாவது பாதி குடும்பத்தை மையமாக வைத்து நகர்கிறது.
பாக்யராஜ், பிரபு, ராதிகா ஆகியோர் படத்துக்கு பலம் சேர்ட்த்ஹிருக்கிறார்கள். இரண்டாவது பாதிதான் எனக்கு பிடித்திருந்தது. கவின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படம் அவருக்கு கமர்ஷியல் ஹிட்டாக அமையும். நயன்தாராவின் கேரக்டர் ராஜா ராணி ரெஜினா கதாபாத்திரத்தை நினைவுப்படுத்துகிறது. குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க வேண்டிய படம்" என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ரசிகர், 'ஹாய் திரைப்படம் உங்களை புன்னகையுடன் வெளியே அனுப்பும் பொழுதுபோக்கு படம். அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் உனக்கும் எனக்கும், யாரடி நீ மோகின் போன்ற குடும்ப பொழுதுபோக்கு படங்களின் சாயலில் இதனை கொடுத்திருக்கிறார். இறுதியி உணர்வுப்பூர்வமான தருணங்களையும் கொடுக்கிறது. கவின் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு திறமையான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நயன்தாராவுக்கு நீண்ட நட்களுக்கு பிறகு அதிக அழுத்தம் இல்லாத கேரக்டர் கிடைத்திருக்கிறது. எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கண்டிப்பாக ரசிப்பார்கள்: பாக்யராஜ், பிரபு, ராதிகா உள்ளிட்டோர் கவனம் ஈர்க்கிறார்கள். ஜென் மார்ட்டினின் இசை படத்துக்கு பலம். ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு, ஃபிலோமின் ராஜின் எடிட்டிங் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன. கவினுக்கும், நயனுக்கு சமீபத்தில் கிடைத்த சிறந்த படமாக இது இருக்கிறது. புதிதாக எதையும் செய்யவில்லை என்றாலும் மனதுக்கு இதமான படங்களை விரும்புபவர்கள் இதனை கண்டிப்பாக ரசிப்பார்கள்" என புகழ்ந்திருக்கிறார்.
தியேட்டரில் பார்க்கலாம்: படத்தை பார்த்த இவர், 'ஹாய் படத்துக்கு ஐந்துக்கு 3.75 மதிப்பெண் கொடுக்கலாம். ஜாலியான ரொமான்ட்டிக், காமெடி படம். கதையே வித்தியாசமாக இருக்கிறது. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை படம் பொழுதுபோக்காக இருக்கிறது. நயன்தாரா சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கவினும் சிறப்பு. பாக்யராஜ் உள்ளிட்டோரின் பங்களிப்பு பலம் சேர்க்கிறது. ஜென் மார்ட்டினின் பிஜிஎம், பாடல்கள் எல்லாம் படத்தின் பலங்களில் ஒன்று. விஷ்ணு எடவனின் எழுத்து புதுமையாக இருக்கிறது. தியேட்டரில் பார்க்க தகுந்த படம்" என்று தெரிவித்திருக்கிறார்.
இவரும் பாசிட்டிவ்தான்: இந்த ரசிகரும் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார். அவர் தன்னுடைய பதிவில், "3.75 மதிப்பெண் கொடுக்கலாம். அன்பு, காதல், மீண்டும் இணைதலை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. எமோஷனல் காட்சிகள் எங்கே உச்சத்துக்கு செல்ல வேண்டும் என்பதை புரிந்து கொடுத்திருக்கிறார்கள். எளிய காதல் கதையாக இது இருக்கிறது. கதை புதிது இல்லையென்றாலும் சரியான எமோஷனும், க்ளீன் ஹியூமரும் படத்துக்கு அழகு சேர்க்கின்றன. கவின் இயல்பாக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களாக நாம் மிஸ் செய்த ஒரு கேரக்டர் ஸோனுக்கு நயன் மீண்டும் திரும்பியிருக்கிறார். இரண்டு பேரின் நடிப்பும் மனதை வருடும் வகையில் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.