📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 24, 2026 01:03 AM

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 300 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே. எல். ராகுல் களம் இறங்கினர். தொடக்க ஜோடி மெதுவாக ஆட்டத்தை தொடங்க, தேவ்தத் படிக்கல் அதிரடியாகவும், நேர்த்தியாகவும் விளையாடி 117 ரன்கள் விளாசி சதம் அடித்து அசத்தினார்.

இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 2-வது சதமாகும். கேப்டன் பொறுப்புடன் விளையாடி 50 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். ஜடேஜா 43 எடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே ரிஷப் பந்த் காயத்தால் ரிட்டைட் அவுட் ஆகி வெளியேறினார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் துருவ் ஜுரெல் 7 ரன்களுடனும், இந்த டெஸ்ட் போட்டியில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஆல்-ரவுண்டர் சாரன்ஷ் ஜெயின் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை தரப்பில் அசிதா பெர்னான்டோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். லகிரு குமாரா, கேஷரா நுவந்தா தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.