📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 14, 2026 01:37 PM

IND vs AFG: 10 ரன்கள் எடுக்கவா சஞ்சு சாம்சனை தேர்வு செய்தீங்க? முகமது கையிப் சரமாரி கேள்வி

IND vs AFG: 10 ரன்கள் எடுக்கவா சஞ்சு சாம்சனை தேர்வு செய்தீங்க? முகமது கையிப் சரமாரி கேள்வி

IND vs AFG: 10 ரன்கள் எடுக்கவா சஞ்சு சாம்சனை தேர்வு செய்தீங்க? முகமது கையிப் சரமாரி கேள்வி

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்திய போட்டிகளில் சிறப்பான ஃபார்மில் இருந்த இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி ஏன் புறக்கணிக்கப்பட்டார் என்றும் அவர் கேட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்கு திரும்பிய போதிலும் அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அவர் 8 பந்துகளில் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை தவறவிட்ட சஞ்சு சாம்சன், அதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போதும் அணியிலிருந்து நீக்கப்பட்டார். சாம்சனின் இந்த வருகை இந்திய அணியின் தொடக்க ஜோடி தேர்வில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பேசிய கையிப், "இன்றைய போட்டியில் வாய்ப்பு பெறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் சஞ்சு சாம்சன் என்ன செய்தார்? பொதுவாக, நீங்கள் அணியில் இருந்து நீக்கப்படும்போது, உள்ளூர் போட்டிகளில் விளையாடி ஃபார்மை மீட்டெடுப்பீர்கள்."

"ஆனால் அவரிடம் அப்படி எதுவும் நடக்கவில்லை, அவருக்கு ஏன் வாய்ப்பு கிடைத்தது? அது ஒரு மிகப்பெரிய கேள்வி. ஜிம்பாப்வே தொடரில் வைபவ் சூரியவன்ஷி சிறப்பாக ரன்கள் குவித்த பிறகும், அதே தொடக்க ஜோடி கூட்டணியுடன் இந்திய அணி ஏன் செல்லவில்லை? அது மற்றொரு கேள்வி," என்று கைஃப் கூறினார்.

"எனது கருத்துப்படி, இந்திய அணி நிர்வாகம் சற்று தயங்குகிறது. தங்களது சிறந்த தொடக்க ஜோடி எது என்பதில் அவர்கள் இன்னும் உறுதியற்ற நிலையில் இருக்கிறார்கள். இந்திய அணி இன்னும் இதைப்பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், 'நான் என்ன தவறு செய்தேன்?' என்று வைபவ் சூரியவன்ஷி தனக்குள் கேட்டுக்கொண்டிருப்பார்," என்றும் கைஃப் கூறினார்.

இப்போட்டியில், அர்ஷ்தீப் சிங்கின் துல்லியமான பந்துவீச்சும், அபிஷேக் சர்மாவின் அதிரடியான 82 ரன்களும் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெறச் செய்தன.முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியை 156/8 ரன்களுக்கு கட்டுப்படுத்துவதில் அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்கு வகித்தார். அவர் தனது 24 பந்துகளில் 16 டாட் பந்துகளுடன் வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடி தொடக்கம் தந்தார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்ட அவர், தனது 32 பந்து இன்னிங்ஸில் 7 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 14 ஓவர்களுக்கும் குறைவாகவே இலக்கை எட்டி வெற்றி பெற்றதுடன், 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.